தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Selvaragavan: செண்ட்பாட்டிலில் ப்ரோபசல்.. அதிர்ந்த ஆடை கடை.. கதறவிட்ட செல்வா.. - காதல் கதை!

Selvaragavan: செண்ட்பாட்டிலில் ப்ரோபசல்.. அதிர்ந்த ஆடை கடை.. கதறவிட்ட செல்வா.. - காதல் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 09, 2024 05:30 AM IST

உடனே செல்வா நானும் வருகிறேன் என்றார். அவரைப் பார்த்து ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் வருகிறேன் என்று சொல்ல கடைசியில் உதவி இயக்குநர்கள் உட்பட அனைவரும் சென்றோம். கடையின் செண்ட் பாட்டில்கள் இருக்கும் பகுதிக்குள் சென்ற செல்வா, திடீரென்று என்னை அழைத்தார்.

கீதாஞ்சலி!
கீதாஞ்சலி!

செல்வராகவனுடன் காதல் உருவானது எப்படி  என்பது குறித்து அவரது மனைவியான கீதாஞ்சலி செல்வராகவன், கடந்த 1 வருடத்திற்கு முன்னதாக சினி உலகம் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பேட்டி இங்கே.

இது குறித்து அவர் பேசும் போது, “செல்வாதான் என்னிடம் முதலில் ஐ லவ் யூ சொன்னார். அவருக்கு தன்னுடைய உணர்ச்சிகளை மூடி மறைக்கத் தெரியாது.  

நாங்கள் ஒரு முறை ஹைதராபாத்திற்கு சென்று இருந்தோம். 3 நாட்கள் என்று திட்டமிட்ட பயணம் 15, 20  நாட்கள் நீண்டது. நான் ஆடைகள் எடுத்து வராத காரணத்தால், கடைக்குச் சென்று ஆடைகள் வாங்கி வருவதாக செல்வாவிடம் சொன்னேன். 

உடனே செல்வா நானும் வருகிறேன் என்றார். அவரைப் பார்த்து ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் வருகிறேன் என்று சொல்ல கடைசியில் உதவி இயக்குநர்கள் உட்பட அனைவரும் சென்றோம். கடையின் செண்ட் பாட்டில்கள் இருக்கும் பகுதிக்குள் சென்ற செல்வா, திடீரென்று என்னை அழைத்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

சென்று பார்த்த போது, கையில் ஒரு செண்ட் பாட்டில் எடுத்து என் முகத்திற்கு நேராக நீட்டினார். அதில் மேரி மீ என்று எழுதி இருந்தது. அதை என்னிடம் காண்பித்து இதில் இருப்பது என்ன என்று கேட்டார்.  நான் மேரி மீ என்று சொன்னேன்.  அப்படியானால் என்னை திருமணம் செய்து கொள் என்று சொன்னார். 

இதனை பார்த்த ராம்ஜி மற்றும் உதவி இயக்குனர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். உடனே நான் அவரிடம் இது உண்மையா? என்று கேட்டேன். அவர் ஆமாம் என்றார். இதனையடுத்து அந்த செண்ட்பாட்டிலை வாங்கிக்கொண்டேன். தொடர்ந்து அம்மா, அப்பாவிடம் வந்து பேசுங்கள் என்றேன்” என்று பேசினார்