Gayathri yuvraaj: இரவெல்லாம் மன அழுத்தம்.. இறுக்கிப்பிடித்த கணவன் கை.. ‘ஒரு குழந்தையோட நிப்பாட்டாதீங்க’ - காயத்ரி!
பிரசவம் முடிந்து குழந்தை வெளியே வந்த பின்னர் கூட எனக்கு பெண் குழந்தைதான் பிறந்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் இருந்தது.

சன் டிவியின் தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் நடிகை காயத்ரி யுவராஜ். தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த இவர், டான்ஸ் மாஸ்டர் யுவராஜை காதலித்து கடந்த 2011ம் ஆண்டு திருமணம் கொண்டார்.
இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அண்மையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து அண்மையில் காயத்ரியும், அவரது கணவரும் லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்தனர்
காயத்ரி பேசும் போது, “ நான் உண்மையில் மகன்தான் பிறப்பான் என்று நினைத்தேன். ஆனால் இவர்தான் இல்லை… இல்லை… கண்டிப்பாக பெண் குழந்தை தான் பிறக்கும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
பிரசவம் முடிந்து குழந்தை வெளியே வந்த பின்னர் கூட எனக்கு பெண் குழந்தைதான் பிறந்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் இருந்தது. அதை அப்பவே நான் மருத்துவரிடம் கேட்டு விட்டேன்.. இதைக்கேட்ட டாக்டர் குழந்தையை என்னிடம் எடுத்து காண்பித்து, இல்லை பெண் குழந்தை தான் பார் என்று சொன்னார்.
11 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் இவளை பெற்றெடுத்திருப்பது எங்களுடைய மகனுக்காகதான். ஆம், எங்களுடைய மொத்த அன்பையும் அவனுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் நாங்கள் அவன் பிறந்த அடுத்த சில வருடங்களில் உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை.
ஆனால் அவனோ அடிக்கடி தம்பி இல்லை..தங்கை இல்லை… என்று சொல்வான். அவனுடைய ஏக்கம் எங்களுக்கு புரிய ஆரம்பித்தது. அதன் பின்னர்தான் நாங்கள் குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்தோம்.
உண்மையில் அவன் இதனை எப்படி எடுத்துக் கொள்வான் என்பது குறித்தான சந்தேகம் எங்களுக்கு இருந்தது. ஆனால் அவன் பாப்பாவை அவ்வளவு அன்பாக பார்த்துக் கொள்கிறான். தயவு செய்து ஒரு குழந்தையோடு நிப்பாட்டி விடாதீர்கள். அந்த குழந்தைக்கு இன்னொரு ஆதரவு வேண்டும்.
குழந்தை கருவான பின்னர் இரவெல்லாம் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அதிகமாக கோபம் வரும். எழுந்து பார்த்தால் எல்லோரும் தூங்கிகொண்டிருப்பார்கள். உடனே நான் இவரை எழுப்புவேன்.
நாங்கள் பழைய பாடல்களை கேட்டு, அதை பற்றி பேசுவோம். காதலித்த தருணங்களை பற்றி பேசுவோம். அப்படித்தான் அந்த காலங்கள் சென்றது” என்று பேசினார்.

டாபிக்ஸ்