GVM: யோஹன் அத்தியாயம் ஒன்று இதனால் தான் டேக் ஆஃப் ஆகல.. பொன்னியின் செல்வன் மாதிரி படம் பண்ணனும்.. கவுதம் வாசுதேவ் மேனன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gvm: யோஹன் அத்தியாயம் ஒன்று இதனால் தான் டேக் ஆஃப் ஆகல.. பொன்னியின் செல்வன் மாதிரி படம் பண்ணனும்.. கவுதம் வாசுதேவ் மேனன்

GVM: யோஹன் அத்தியாயம் ஒன்று இதனால் தான் டேக் ஆஃப் ஆகல.. பொன்னியின் செல்வன் மாதிரி படம் பண்ணனும்.. கவுதம் வாசுதேவ் மேனன்

Marimuthu M HT Tamil
Jan 14, 2025 09:06 PM IST

GVM: யோஹன் அத்தியாயம் ஒன்று இதனால் தான் டேக் ஆஃப் ஆகல.. பொன்னியின் செல்வன் மாதிரி படம் பண்ணனும்.. கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டியளித்துள்ளார்.

GVM: யோஹன் அத்தியாயம் ஒன்று இதனால் தான் டேக் ஆஃப் ஆகல.. பொன்னியின் செல்வன் மாதிரி படம் பண்ணனும்.. கவுதம் வாசுதேவ் மேனன்
GVM: யோஹன் அத்தியாயம் ஒன்று இதனால் தான் டேக் ஆஃப் ஆகல.. பொன்னியின் செல்வன் மாதிரி படம் பண்ணனும்.. கவுதம் வாசுதேவ் மேனன்

இதுதொடர்பாக மதன் கவுரி யூட்யூப் சேனலில், ஒ.எம்.ஜி. ஷோவில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அளித்த பேட்டியின் தொகுப்பு.. அதில், ‘’ இயக்குநர்கள் பெயரை வைத்து படம் பார்க்க ரசிகர்கள் வர ஆரம்பிச்சிட்டாங்க. நீங்கள் வரும்போது அப்படி இல்லை. மின்னலே என்பது மாதவனுடைய திரைப்படம் என்று இருந்தது. அந்த சமயத்தில் டைரக்‌ஷனை தேர்வுசெய்யக் காரணம் என்ன?

- 1960, 70 காலகட்டத்தில் படத்தின் இயக்குநருக்காகவும் படம் பார்க்க ரசிகர்கள் வந்திருக்காங்க. ஸ்ரீதர், பீம்சிங் இவங்களுடைய படம் பார்க்க ஒரு ஆடியன்ஸ் வரும். பாலச்சந்தர் சார் படம் பார்க்க ஒரு ஆடியன்ஸ் வரும். என்னுடைய மாமா, ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த காதலிக்க நேரமில்லை படத்தினைப் பற்றி சொல்வார். நான் என்னுடைய இளமைக்காலத்தில் மணிரத்னம் சார் படத்துக்கு தியேட்டருக்குப் போவேன். அக்னி நட்சத்திரம், இதயத்தைத் திருடாதே ஆகியப் படங்கள் நான் மணிரத்னம் சார் டைரக்‌ஷனுக்காகப் போய்ப் பார்த்தேன்.

நீங்கள் ஏன் டைரக்‌ஷனுக்குள் வந்தீங்க. ஏனென்றால், இப்போது நடிகராக இருக்கீங்க?

பதில்: என்னுடைய சில பிரச்னைகள் காரணமாகத் தான் நான் நடிக்க வந்தேன். தினமும் நான் எழுந்ததும் நடிக்க கதைக் கேட்கணும் அப்படியில்லை. இந்த இன்டர்வியூ முடிச்சதும் போய் ஒரு கதை எழுதணும்னு தான் எனக்குத் தோணும். அதைத்தாண்டி, என்னிடம் படத்தில் நடிக்க முதலில் தேதி கேட்டார்கள் என்றால், ஒரு தடவைக்கு 15 தடவை நான் யோசிக்கிறேன். அப்படி, ஒரு படத்தில் முதலில் கமிட்டாகும்போது, நான் பார்ப்பது, அந்தப் படம் தரும் பணம். அது நல்லது. அடுத்து நான் பார்ப்பது ஒரு கம்ஃபர்ட்டபிள் செட்டுக்குள் இருப்பேனா எனப் பார்ப்பது.

இந்த டைரக்‌ஷன் இல்லையென்றால், ஒரு வேளை இன்ஜினியரிங்கில் இருப்பேனோ, கிரிக்கெட்டில் இருப்பேனோ என எனக்கு நிச்சயமாகத்தெரியாது. இருந்தாலும், அதைத்தாண்டி, நான் டைரக்‌ஷன்தான்னு வந்துட்டேன். நான் எழுதிய பல கதைகள், நான் என் வாழ்க்கையில் நடந்தது தான். அது மக்களுக்கே தெரியும். கிளாடியேட்டர் படத்தை நான் தியேட்டரில் பார்க்கும்போது, அதனுடன் நான் வாழ ஆரம்பிச்சிடுறேன். அதனால் தான் எனக்கு டைரக்‌ஷன் பிடிக்கும்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ராஜா காலத்து கதைகள் எப்படியிருக்கும்ன்னு பார்க்க ஆசையாக இருக்குது?

பதில்: நான் கேம் ஆஃப் த்ரோன்ஸ்ஸை பார்க்கவில்லை. ஆனால், பொன்னியின் செல்வனை பார்த்தேன். ஏனென்றால், மணிரத்னம் சார். நானும் பாகுபலி, பொன்னியின் செல்வன், கிளாடியேட்டர் பார்த்ததுக்கு அப்புறம் நாமாளும் ஏன் அப்படி யோசிக்கக் கூடாதுன்னு எண்ணம் இப்போது தான் வந்திட்டு இருக்கு.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி உங்களிடம் விரும்புறாங்க? சில படங்கள் விசுவலாக இருந்தாலும் கனெக்ட் ஆகுறதில் கஷ்டம் இருக்கு. அது பத்தி?

பதில்: நீ தானே என் பொன்வசந்தம் ரொம்பப் பிடிச்சு தான் நான் பண்ணுனேன். வாரணம் ஆயிரமும் விண்ணைத்தாண்டி வருவாயாவும் அது என் வாழ்க்கையை நான் திரும்பப் பார்க்கிறது மாதிரி.

அந்தப் படம் தியேட்டரில் வொர்க் அவுட் ஆகலை. படமாக, அது எனக்குப் பிடித்து இருந்தது. என்னை அறிந்தால் படம் கூட நான் நல்லா வொர்க் பண்ணியிருக்கேன் என நினைக்கிறேன். மக்கள் ரொம்ப எதிர்பார்த்திட்டாங்களான்னு தெரியல. அச்சம் என்பது மடமையடா பாடல்கள் எல்லா பிரபலம். ஆனாலும், பெரியளவில் இம்பேக்ட் ஆகல. அதுக்கு சில காரணங்கள் இருக்கு.

யோஹன் அத்தியாயம் ஒன்று ஏன் டேக் ஆஃப் ஆகல?

பதில்: யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் கதை எழுத இரண்டரை வருஷம் ஆச்சு. எழுதி முடிச்சிட்டு விஜய்கிட்ட சொன்னதும் இது இங்கிலீஷ் படம் மாதிரி இருக்குணா. ஹீரோயினே அமெரிக்கனை ஃபிக்ஸ் செய்திருக்கீங்க. இது தமிழ்ப்படம் மாதிரி தெரியலைன்னு சொல்லி, நான் இந்தப் படம் பண்ணலைன்னு சொன்னார். ஒரு சூப்பர் ஸ்டார் ஆக்டரை, ஒரு இண்டர்நேஷனல் லெவலில் கொண்டுபோக எழுதியிருந்தேன்.அது வொர்க் அவுட் ஆகலை.

நன்றி: மதன் கவுரி யூட்யூப் சேனல்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.