Gautham Vasudev Menon: ‘என்ன விட உயரமா இருக்காங்களே’ - சூர்யா கேட்ட கேள்வி! - கெளதம் மேனன் செய்த மேஜிக்!
இப்படி கல்ட் கிளாசிக்காக மாறிப்போன இந்தப்படத்தின் கதாநாயகி சமீரா ரெட்டி சூர்யாவை விட கொஞ்சம் உயரம் அதிகமாக இருப்பார். அவர்களுக்குள்ளாகவே அந்த உரையாடல் நடப்பதை கெளதம் மேனன் பாடல் காட்சி ஒன்றில் வைத்திருப்பார்.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். சூர்யா, சமீராரெட்டி, திவ்யா, சிம்ரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.
அப்பா - மகன் உறவு, காதல் தோல்வி, விரக்தி, ஆக்ஷன், வாழ்வியல் என ஒட்டுமொத்த பேக்கேஜாக இந்தப்படம் உருவாகி இருந்தது. வெளியான சமயத்தில் படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லையென்றாலும் கூட, அதன் பின்னர் மக்களால் படம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டு கழியும் போதும் படம் வெளியான அன்றைய தினத்தில், நெட்டிசன்கள் வாரணம் ஆயிரம் படம் குறித்து பேசி அதனை சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்குவர்.
இப்படி கல்ட் கிளாசிக்காக மாறிப்போன இந்தப்படத்தின் கதாநாயகி சமீரா ரெட்டி சூர்யாவை விட கொஞ்சம் உயரம் அதிகமாக இருப்பார். அவர்களுக்குள்ளாகவே அந்த உரையாடல் நடப்பதை கெளதம் மேனன் பாடல் காட்சி ஒன்றில் வைத்திருப்பார். படத்திற்கான கதாபாத்திரத்தேர்வு நடக்கும் போதே சூர்யா சமீரா தன்னை விட உயரமாக இருப்பதை குறித்து கேட்டு இருக்கிறார். இதை கெளதம் மேனன் அண்மையில் எஸ்.எஸ். மியூசிக் சேனலுக்கு கொடுத்த நேர்காணலில் பேசி இருந்தார்.
இது குறித்து அவர் பேசும் போது, “என்னுடையை கதாபாத்திரங்களுக்கான நடிகர்களை நான் எல்லோரும் தேர்வு செய்வது போல தேர்வு செய்வதில்லை. அது சினிமா துறையில் இருக்கும் ஏற்கனவே எழுதப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்காது.
சமீரா அந்த சமயத்தில் வேறு விதமான சினிமாக்களை செய்து கொண்டு இருந்தார். ஆனால் நான் அந்தப்படத்தில் சமீரா ரெட்டியை கொண்டு வந்தேன். சூர்யாவே என்னிடம் வந்து சமீரா உயரமாக இருக்கிறார்.. சரியாக வருமா என்று கேட்டார். அவர் அப்படி சொன்ன பிறகுதான் படத்திலேயே அதை ஒரு விஷயமாக செய்து விடலாம் என்றுதான் அடியே கொல்லுதே பாடலில் அந்த காட்சியை வைத்தேன். இப்படிதான் என்னுடைய பிற படங்களின் கதாநாயகிகளையும் நான் தேர்ந்தெடுப்பேன்” என்று பேசினார்.
டாபிக்ஸ்