Gautham Menon: சச்சின், காம்ப்ளி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கிரிக்கெட் படம்! கெளதம் மேனன் ப்ளான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gautham Menon: சச்சின், காம்ப்ளி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கிரிக்கெட் படம்! கெளதம் மேனன் ப்ளான்

Gautham Menon: சச்சின், காம்ப்ளி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து கிரிக்கெட் படம்! கெளதம் மேனன் ப்ளான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Nov 15, 2023 03:03 PM IST

முழுக்க கிரிக்கெட் பின்னணியில் வைத்து புதிய படத்தை இயக்கும் திட்டம் இருப்பதாக இயக்குநர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். இந்தப் படம் சச்சின், காம்ப்ளி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முழுக்க கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து படம் இயக்க கெளதம் மேனன் திட்டம்
முழுக்க கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து படம் இயக்க கெளதம் மேனன் திட்டம்

இதையடுத்து துருவ நட்சத்திரம் பட புரொமோஷனுக்காக மும்பை சென்றிருக்கும் கெளதம் மேனன், அங்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி போட்டியில் சிறிது நேரம் வர்ணனையில் ஈடுபட்டார். அவருடன் ஆர்ஜே பாலாஜி, முன்னாள் கிரி்கெட் வீரர் பத்ரிநாத் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அப்போது கிரிக்கெட் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்த கெளதம் மேனன், முழுக்க கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக வைத்து படம் இயக்கும் எண்ணம் இருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக கெளதம் மேனன் கூறியதாவது: " எனது படங்களில் கிரிக்கெட் விளையாட்டு ஏதாவது ஒரு வகையில் தொடர்புபடுத்தியிருப்பேன். வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவை கிரிக்கெட் வீரராக காட்டியிருப்பார். விண்ணைதாண்டி வருவாயா படத்தில் சிம்பு பைட் சீன் கிரிக்கெட் விளையாடும்போது நிகழ்வதாக இருக்கும்.

துருவ நட்சத்திரம் படத்தில் கூட கிரிக்கெட் இணைத்து பேசி வசனங்கள் இடம்பிடித்திருக்கும். இதை ட்ரெய்லரில் கூட பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் முழுக்க கிரிக்கெட்டை பின்னணியை வைத்து படம் எடுக்கும் எண்ணம் உள்ளது.

கிராமத்திலிருந்து சிறப்பாக கிரிக்கெட் விளையாடும் இருவரும் தேசிய அணிக்காக விளையாடுவது போன்ற கதையோ யோசித்துள்ளேன். சச்சின், வினோத் காம்ப்ளி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த கதையை உருவாக்கவுள்ளேன். இதற்கான எழுத்து பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்" என்றார்.

முன்னதாக கெளதம் மேனன் பேசும்போது தனது மகன்கள் மூன்று பேருக்கும் கிரிக்கெட் விளையாட்டு மீது இருக்கும் ஆர்வம் குறித்து பேசினார். இதில் மூத்த மகன் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக ஒரு சீசனில் விளையாடியது பற்றியும் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.