Gautham menon: மூலைக்குச் சென்ற துருவநட்சத்திரம்.. ‘ஒரு பய உதவி செய்யல; படம் ஓடுனாலே வயித்தெரிச்சல் பட்றாங்க’ - கெளதம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gautham Menon: மூலைக்குச் சென்ற துருவநட்சத்திரம்.. ‘ஒரு பய உதவி செய்யல; படம் ஓடுனாலே வயித்தெரிச்சல் பட்றாங்க’ - கெளதம்

Gautham menon: மூலைக்குச் சென்ற துருவநட்சத்திரம்.. ‘ஒரு பய உதவி செய்யல; படம் ஓடுனாலே வயித்தெரிச்சல் பட்றாங்க’ - கெளதம்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 13, 2025 08:47 AM IST

Gautham menon: திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்திய நேர்காணலில், திரையுலகில் அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசினார்.

Gautham menon: மூலைக்குச் சென்ற துருவநட்சத்திரம்.. ‘ஒரு பய உதவி செய்யல; படம் ஓடுனாலே வயித்தெரிச்சல் பட்றாங்க’ - கெளதம்
Gautham menon: மூலைக்குச் சென்ற துருவநட்சத்திரம்.. ‘ஒரு பய உதவி செய்யல; படம் ஓடுனாலே வயித்தெரிச்சல் பட்றாங்க’ - கெளதம்

அப்படி யாரும் இல்லை

தொடர்ந்து பேசிய அவர், ஆம், அதுதான் உண்மை. ஒரு திரைப்படம் நன்றாக ஓடினால்.. அப்படியா அந்தப்படம் நன்றாக ஓடுகிறதா? என்று கவலைப்படுபவர்கள்தான் இங்கு அதிகம். நான் சொல்வது கேட்பதற்கு சங்கடமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. தயாரிப்பாளர் தாணு மற்றும் லிங்குசாமி போன்ற மிகச்சிலரே படத்தைப் பார்த்தார்கள்.

ஆனால் அவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. நான் சில ஸ்டியோக்களுக்கு படத்தை திரையிட்டுக் காண்பித்தேன். அவர்கள் இங்குள்ள நபர்களிடம் படம் குறித்து கேட்டால், அந்தப்படத்தை வாங்க வேண்டாம் என்று கூறி விடுகிறார்கள். மக்கள் படம் பார்க்க விரும்புவதால், இந்தத்திரைத்துறயில் நான் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறேன். என்னால் அதனை வெளியே கொண்டு வர முடியவில்லை.

2013 -ல் தொடங்கப்பட்ட படம்

2013ம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவநட்சத்திரம் திரைப்படம் 2017ம் ஆண்டு ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் பணநெருக்கடி காரணமாக அந்தப்படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே பல்வேறு முறை அந்தப்படத்தை ரிலீஸ் செய்ய கெளதம் மேனன் முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளதம் மேனனின் சமீபத்திய படைப்புகள்

கௌதம் தற்போது நடிப்பிலும் தீவிரமாக மும்மரம் காட்டி விடுகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு ரத்னம், ஹிட் லிஸ்ட், ஹிட்லர் மற்றும் விடுதலை 2 ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது, வராகம், பாஸூகா, தளபதி 69 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாகிறது. அவர் கடைசியாக இயக்கிய 2024 திரைப்படமான ஜோஷுவா இமை போல் காக்க, துருவ நட்சத்திரத்தின் யூனிவர்சில் எடுக்கப்பட்டிருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.