‘மொத்தம் நான்கு கட்டம்.. டாக்சிக் ரிலேஷன்ஷிப் ரொம்ப கஷ்டம் கொடுக்கும்.. ஆனா உங்க வாழ்க்கை’ - கெளதமி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘மொத்தம் நான்கு கட்டம்.. டாக்சிக் ரிலேஷன்ஷிப் ரொம்ப கஷ்டம் கொடுக்கும்.. ஆனா உங்க வாழ்க்கை’ - கெளதமி!

‘மொத்தம் நான்கு கட்டம்.. டாக்சிக் ரிலேஷன்ஷிப் ரொம்ப கஷ்டம் கொடுக்கும்.. ஆனா உங்க வாழ்க்கை’ - கெளதமி!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 18, 2024 02:25 PM IST

ஒரு நல்ல நண்பர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தால், அது டாக்சிக் ரிலேஷன்ஷிப் - கெளதமி!

 ‘மொத்தம் நான்கு கட்டம்.. டாக்சிக் ரிலேஷன்ஷிப் ரொம்ப கஷ்டம் கொடுக்கும்.. ஆனா உங்க வாழ்க்கை’ - கெளதமி!
‘மொத்தம் நான்கு கட்டம்.. டாக்சிக் ரிலேஷன்ஷிப் ரொம்ப கஷ்டம் கொடுக்கும்.. ஆனா உங்க வாழ்க்கை’ - கெளதமி!

இந்த நிலையில் நடிகை கெளதமி அண்மையில் லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில், டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியே வருவது எப்படி என்பது குறித்து பேசி இருக்கிறார்.

தவறான மனநிலை

இது குறித்து அவர் பேசும் போது, “டாக்சிக் ரிலேஷன்ஷிப்பை பொருத்தவரை, அதன் அடிப்படையான விஷயம் என்னவென்றால் அதை விட்டு அதில் இருப்பவர்களால் வெளியே வர முடியாது. அதனால் தான் அது டாக்சிக்காக மாறுகிறது. அந்த ரிலேஷன்ஷிப்பில் ஏதோ ஒரு குறை இருக்கிறது. அந்த குறை உங்களால் தான் இருக்கிறது. அந்த ரிலேஷன்ஷிப்பில் நடக்கக்கூடிய தவறான விஷயங்கள் அனைத்தும் உங்களால்தான் நடக்கிறது என்று பார்ட்னர் நினைப்பார். இது காலம் காலமாக இருக்கக்கூடிய தவறான மனநிலை.

ஒரு நல்ல நண்பர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தால், அதுவும் டாக்சிக் ரிலேஷன்ஷிப்தான். நாம் டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம் என்று தெரிந்து கொள்வதற்கு நிச்சயம் நேரம் பிடிக்கும். கண்டுபிடிக்கும் நேரம் முதல் கட்டமாக இருக்கும். அதிலிருந்து நான் வெளியே வரவேண்டும் என்று நினைப்பது இரண்டாம் கட்டம்.

அதன் பின்னர் அந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியே வருவதற்கான ஆதரவுகளை தேடியும், நம் உள்ளூர ஒரு வலிமையை வளர்த்துக் கொண்டு அதிலிருந்து வெளியே வருவதும் மூன்றாம் கட்டம். அந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியே வந்த பிறகு நமக்கான சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்வது நான்காம் கட்டம்.

வெளியே வருவது கடினம்

உண்மையில் டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளியே வருவது மிக மிக கடினமான விஷயம். ஆனால் அது முழுக்க முழுக்க முடியாது என்று கூறிவிட முடியாது. உங்களால் நிச்சயமாக டாக்சிக்கான ஒரு சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியும்.

உங்களுடைய வாழ்க்கை மிக மிக அற்புதமானது. அப்படி இருக்கும் பொழுது, நீங்கள் உங்கள் வாழ்க்கையை நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்வதற்கு எல்லா விதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் டாக்சிக்கான ஒரு நிலைமையை உணரும் பொழுது, நான் இந்த நிலைமையை உருவாக்கி விட்டேனே என்று உங்களை நீங்களே குறை பட்டு கொள்ள வேண்டாம். ஆமாம், நீங்கள் தவறான முடிவெடுத்து விட்டீர்கள் அது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை; பரவாயில்லை. நீங்கள் இதைத் திட்டமிட்டு செய்யவில்லை. இது வாழ்க்கையின் ஒரு பகுதி. நீங்கள் அதிலிருந்து வெளியே வந்து உங்களை நீங்களே குணப்படுத்திக் கொள்ளுங்கள்.’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.