தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Garudan Twitter Review: உயரம் தொட்ட சூரி.. சீட் நுனியில் ரசிகர்கள்.. எப்படி இருக்கிறது கருடன் திரைப்படம்?

Garudan Twitter Review: உயரம் தொட்ட சூரி.. சீட் நுனியில் ரசிகர்கள்.. எப்படி இருக்கிறது கருடன் திரைப்படம்?

Aarthi Balaji HT Tamil
May 31, 2024 12:23 PM IST

Garudan Twitter Review: கருடன் படம் இன்று ( மே 31 ) வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் சென்று படம் பார்த்து வருகிறார்கள். தொடர்ந்து தங்களின் விமர்சனத்தை ட்விட்டர் தளத்தில் வெளியீட்டு வருகிறார்கள்.

உயரம் தொட்ட சூரி.. சீட் நுனியில் ரசிகர்கள்.. எப்படி இருக்கிறது கருடன் திரைப்படம்
உயரம் தொட்ட சூரி.. சீட் நுனியில் ரசிகர்கள்.. எப்படி இருக்கிறது கருடன் திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

நெடுஞ்சாலை படப்புகழ் ஷிவிதா நாயர், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷிணி ஹரிப்பிரியன், பிரகிடா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்துள்ளார்கள்.

படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் மே 31 ஆம் தேதி இன்று ரிலீஸானது.

மேலும், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கருடன் படம் இன்று ( மே 31 ) வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் சென்று படம் பார்த்து வருகிறார்கள். தொடர்ந்து தங்களின் விமர்சனத்தை ட்விட்டர் தளத்தில் வெளியீட்டு வருகிறார்கள்.

வேகத்தை தொடரும்

1 வது பாதி முடிந்தது. பாங்கர் இடைவெளி. சூரி சசிகுமார் உன்னி U1 இசை. ஹோப் 2 ஆவது பாதி இந்த வேகத்தை தொடரும் என்று.

கருடன் இன்டர்வெல் க்ளைமாக்ஸ் 2வது பாதி போல ஃபீல்ட் ஃபீல்ட். ஃபயர் ஓடா போகணு வேண்டுகிறேன்.

செம இடைவேளை

Grippy and Engaging. soori sema performance adhum interval block la Yuvan songs good & BGM semma. சசிகுமார் & உன்னிமுகுந்தன் ஆகியோருக்கு நல்ல ரோல். செம இடைவேளை தொகுதி, சமீபத்தில் ஒரு சிறந்த இடைவெளி கொண்டு உள்ளது. இரண்டாம் பாதிக்கு வருவோம்.

எட்ஜ் ஆஃப் சீட்

கருடன் - சூரி நடிப்பு பாத்து ஆடியன்ஸ் எட்ஜ் ஆஃப் சீட் இருக்காங்க இது சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லை. தமிழ் சினிமாவுக்கு தரமான ஹீரோ கிடைத்துவிட்டார்.

க்ரிப்பிங் & சூப்பரான முதல் பாதி

கருடன் - க்ரிப்பிங் & சூப்பரான முதல் பாதி

சூரி மிரட்டல் நிகழ்ச்சிகள் குறிப்பாக இடைவேளை பிளாக் வெரா மாறி

சசிகுமார் உன்னிமுகுந்தன் பாத்திரங்கள் சக்தி வாய்ந்தவை

சுவாரசியமான & ஈர்க்கும் திரைக்கதை இயக்குனரின் சிறப்பு

யுவன் தரமான ஸ்கோர்.

ஒட்டுமொத்த திருப்திகரமான முதல் பாதி. இரண்டாம் பாதியை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்