Tamil News  /  Entertainment  /  Garudan First Look Poster And Title Glimpse Released

Watch Video: வெற்றிமாறன் கதையில் சூரி, சசிகுமார்..டைட்டில் என்ன தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Jan 19, 2024 05:51 PM IST

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்திற்கு 'கருடன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சசிக்குமார், உன்னிமுகுந்தன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கருடன் போஸ்டர்
கருடன் போஸ்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக சூரி தன்னுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில், கருடனின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

கிளிம்ஸ் வீடியோவில், "விஸ்வாசத்துல மனுஷங்களுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா எப்பவும் நாய் தான் ஜெயிக்கும். ஆனா அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா ஜெயிக்கிறது என்னைக்குமே சொக்கன் தான்" என்ற வசனம் மூலம் சூரி விஸ்வாசத்தின் மறுஉருவம் என்பதை காட்டுவதுபோல் உள்ளது. பின்னணியில் செங்கல் சூளை காட்டப்படுகிறது. செங்கல் சூளையை மையப்படுத்திய கதையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்யா, நிவின் பாலி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை தங்களது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்து படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் கோலிவுட்டில் உலாவுகிறது. துரை செந்தில்குமார் சொன்ன கதைப் பிடித்திருந்ததால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

தற்போது தி லெஜண்ட் சரவணன் காஷ்மீரில் இந்த படத்துக்கான லொகேஷன் பார்த்து வருகிறார். இதுதொடர்பாக காஷ்மீரில் இருந்து அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.