Ganja Karuppu: ‘ஒத்த ரூபா கூட கொடுக்க மாட்டார்.. டீ குடிக்க போனா கூட.. அதனாலத்தான்..’ - வடிவேலுவை வெளுத்த கஞ்சா கருப்பு!
உண்மையில் வடிவேலு யாருக்கும் எதையும் கொடுக்கவே மாட்டார். அவர் அப்படி கொடுக்காத காரணத்தினால் தான் இன்று நன்றாக இருக்கிறார். நாம் கொடுத்ததினால் தான் கெட்டுப் போய் விட்டோம். அவர் ஒரு ரூபாய் கூட இழக்க மாட்டார்.

தமிழ் சினிமாவில் காமெடியனாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் அண்மையில் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் வடிவேலு பற்றியும், தன்னுடைய வேல்முருகன் போர்வெல்ஸ் படம் நஷ்டமானது குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ நான் படம் தயாரித்தது முட்டாள்தனமான விஷயம். அதாவது ஒரு இயக்குநர் என்பவன் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் இந்த படத்தின் இயக்குநர் அவன் சாப்பிட்டுவிட்டு பிறரை பட்டினி போடும் குணம் கொண்டவனாக வந்துவிட்டார். அதனால் இழந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக நான் கட்டிக் கொண்டிருக்கிறேன்.
அதை நினைத்து நான் பல நேரங்களில் வேதனைப்பட்டு இருக்கிறேன். அந்த சமயத்தில் நான் கொஞ்சம் பிசியாக இருந்தேன். அதனால், எனக்கு எதையுமே கவனிக்க நேரமே இல்லை. உண்மையாக சொல்கிறேன். அடுத்த ஜென்மத்தில் நான் பாம்பாக பிறந்தால் கூட, படம் எடுக்க மாட்டேன்; தவழ்ந்து சென்று விடுவேன்.
உண்மையில் வடிவேலு யாருக்கும் எதையும் கொடுக்கவே மாட்டார். அவர் அப்படி கொடுக்காத காரணத்தினால் தான் இன்று நன்றாக இருக்கிறார். நாம் கொடுத்ததினால் தான் கெட்டுப் போய் விட்டோம். அவர் ஒரு ரூபாய் கூட இழக்க மாட்டார்.
டீ சாப்பிட்ட இடத்தில் கூட, அவர் காசு கொடுக்க மாட்டார். அவர் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார். அவர் வீட்டு வாசலில் சென்று நாம் நின்றால் பெட்ரோலுக்கு 1500 ரூபாய் கேட்பார். அப்படிப்பட்ட ஒரு மனிதர் தான் வடிவேலு.
நான் வெளி உலகத்திற்கு நிறைய உதவிகளை செய்து கொண்டு தான் இருக்கிறேன். பசித்தால் பணத்தை தின்ன முடியாது சோத்தைதான் தின்ன முடியும்.
இவ்வளவு உதவி செய்கிறேன் என்னுடைய குழந்தைகளுக்கான ஃபீஸை நான் கட்டவில்லை பள்ளிக்கூடத்தில் இருந்து அனுப்பி விட்டார்கள். இரண்டு நாட்களில் கட்டி விடுகிறேன் என்று சொல்லி அனுப்பி இருக்கிறேன். காரணம் நம்ம வீட்டுப் பிள்ளைகள் எப்படியாவது தன்னாலே வளர்ந்து விடும், ஆனால், அடுத்த வீட்டு பிள்ளைகளை நாம் கைவிட முடியாது” இவ்வாறு அவர் பேசினார்.

டாபிக்ஸ்