கங்குவா அப்டேட் .. ரசிகர்களுக்கு ட்ரீட்.. 2000 கோடி வசூல் குறித்த விவாதத்திற்கு இடையில் புதிய அறிவிப்பு வெளியானது!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கங்குவா அப்டேட் .. ரசிகர்களுக்கு ட்ரீட்.. 2000 கோடி வசூல் குறித்த விவாதத்திற்கு இடையில் புதிய அறிவிப்பு வெளியானது!

கங்குவா அப்டேட் .. ரசிகர்களுக்கு ட்ரீட்.. 2000 கோடி வசூல் குறித்த விவாதத்திற்கு இடையில் புதிய அறிவிப்பு வெளியானது!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 19, 2024 07:09 AM IST

சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி கங்குவா படத்தின் ‘Vamos Brincar Babe’ என்ற பாடல் வரும் அக்டோபர் 21ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

கங்குவா அப்டேட் .. ரசிகர்களுக்கு ட்ரீட்.. 2000 கோடி வசூல் குறித்த விவாதத்திற்கு இடையில் புதிய அறிவிப்பு வெளியானது!
கங்குவா அப்டேட் .. ரசிகர்களுக்கு ட்ரீட்.. 2000 கோடி வசூல் குறித்த விவாதத்திற்கு இடையில் புதிய அறிவிப்பு வெளியானது!

பாடல் வெளியாகும் தேதி

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி கங்குவா படத்தின் ‘Vamos Brincar Babe’ என்ற பாடல் வரும் அக்டோபர் 21ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கங்குவா படத்தில் நடித்தவர்கள் விபரம்

கங்குவா சூர்யா நடிக்கும் 42ஆவது படமாகும். இந்த கங்குவா படத்தில் ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கங்குவா படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிஷாத் யூசுப் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார்.

கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜி தீவுகள், கொடைக்கானல், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி பகுதிகளில் நடைபெற்றது.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது.

முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் சிறுத்தை சிவா, “உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு என்று பொருள். கங்குவான் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசியிருக்கிறார், சிறுத்தை சிவா.

2000 கோடி வசூல் சாத்தியமா!

சமீபத்தில் கலாட்டா ஊடகத்துக்கு கங்குவா படக்குழுவினர் அளித்த பேட்டியில், ஸ்டுடியோ கிரீன் பேனரின் கீழ் கங்குவாவை தயாரித்த கே.ஈ.ஞானவேல் ராஜாவிடம் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை கங்குவா அடிக்குமா என்பது குறித்து கேட்கப்பட்டது.

ஏனெனில், கே.ஜி.எஃப் 2 மற்றும் இந்தி, தெலுங்கு மொழிப் படங்கள் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளன. இதுவரை எந்த தமிழ்ப் படமும் அந்த சாதனையை எட்டியதில்லை.

கங்குவாவால் அதை மாற்ற முடியுமா என்று படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவிடம் கேட்டபோது, "நான் ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எதிர்பார்க்கிறேன். அதை ஏன் ரூ.1000 கோடி என்று குறைத்து மதிப்பிடுகிறீர்கள்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார். அவரது இந்த பேச்சு திரைத்துறையில் பேசுபொருளாக மாறி உள்ளது. இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.