Gana Bala Salary: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா பாலா வாங்கிய சம்பளம் என்ன?
கானா பாலா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக வெவ்வேறு திருப்பங்கள் நடக்கிறது.
கடந்த ஒரு வாரத்தில் போட்டியாளர்களின் செயல்களுக்காக கமல் ஹாசன் பாடம் நடத்துவார் என்பதால் அனைவரின் பார்வையும் வார இறுதி எபிசோடில் உள்ளது. வெளியேற்றப்பட்ட போட்டியாளரின் பெயரையும் இறுதி வாரத்தில் தான் அறிவிப்பார்.
கடந்த வாரம், ஐஷு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து இந்த வாரம் ஒன்றல்ல, இருவரல்ல, எட்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் பட்டியலில் இருந்தனர்.
விசித்ரா, ரவீனா தாஹா, மணிச்சந்திரா, பூர்ணிமா, ஆர்ஜே பிராவோ, கானா பாலா, அக்ஷயா உதயகுமார் மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் பிக் பாஸ் ஏழாவது வாரத்தில் வெளியேற்றப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
இறுதி வாக்களிப்பு போக்குகளின் படி, விசித்ரா பார்வையாளர்களிடமிருந்து அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ளார். கடைசி மூன்று இடங்களில் கானா பாலா, அக்ஷயா, விக்ரம் ஆகியோர் இருந்தனர்.
இதில் மக்களின் மனதை குறைவாக கவர்ந்தர்கள் என்ற அடிப்படையில் கானா பாலா வெளியேறினார்.
அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கானா பாலாவிற்கு ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 21 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த கானா பாலா 5,25,000 ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
ஐஷு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது நீக்கம் நிக்சனை உணர்ச்சிவசப்பட வைத்தது. பிக் பாஸ் தமிழ் 7 வீட்டில் இருந்து தனது நண்பர் வெளியேறியதற்கு விசித்ரா தான் காரணம் என குற்றம் சாட்டினார்.
அவர்களின் வளர்ந்து வரும் நெருக்கத்தை கருத்தில் கொண்டு, நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் திறன் ஐஷுவுக்கு இருப்பதாக அவர் நம்பியதால் வருத்தமடைந்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.