4 பாடல்களுக்கு உங்களுக்கு 75 கோடியா?.. ஷங்கரை வறுத்த நெட்டிசன்கள்.. பில் விபரத்தை வெளியிட்ட படக்குழு!
4 பாடல்களுக்கு உங்களுக்கு 75 கோடியா?.. ஷங்கரை வறுத்த நெட்டிசன்கள்.. பில் விபரத்தை வெளியிட்ட படக்குழு!‘நான்கு பாடல்களுக்கு இயக்குநர் ஷங்கர் 75 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு படக்குழு விளக்கம் அளித்திருக்கிறது’
ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியிருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்து இருக்கிறார்.
வழக்கமாக, ஷங்கர் படம் என்றாலே பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக பாடல்களுக்கு பெருமெனக்கெடலை எடுக்கும் அவர், அதற்காக கோடிகளைக் கொட்டவும் தயங்கமாட்டார். இதற்கு அவர் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். அந்த வரிசையில், கேம் சேஞ்சர் படத்தில் இடம் பெற்ற நான்கு பாடலுக்கு மட்டும் ஷங்கர் 78 கோடி செல்வழித்து இருக்கிறார் என்பது தெரிய வந்தது. இதற்கு சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், படக்குழு அதன் விபரங்களை வெளியிட்டு இருக்கிறது.
கேம் சேஞ்சர் பாடல்களுக்கு ரூ.75 கோடி விலை ஏன்?
பாடல் 1
அதில், கேம் சேஞ்சர் படத்தில் இடம் பெற்ற ஜரகண்டி பாடலுக்கு பிரபுதேவா நடன வடிவமைப்பு செய்திருக்கிறார். அந்தப்பாடலில் 600 நடனக் கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். இந்தப்பாடல் 70 அடி மலை - கிராம செட்டில் 13 நாட்கள் படமாக்கப்பட்டது. ஆடைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சணலால் செய்யப்பட்டன.
பாடல் 2
கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்த ரா மச்சா மச்சா பாடலில் 1000 நடனக் கலைஞர்கள் ஆடியிருக்கின்றனர். இது இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது.
பாடல் 3
நானா ஹைரானா பாடல் இந்தியாவில் முதன் முறையாக இன்ஃப்ரா ரெட் கேமராவில் ஷூட் செய்யப்பட்ட பாடலாக அமைந்திருக்கிறது. இந்த பாடல் நியூசிலாந்தில் படமாக்கப்பட்டது.
பாடல் 4
தோப் பாடலை பொறுத்தவரை ஜானி மாஸ்டர் இப்பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்திருக்கிறார்.
100 ரஷ்ய நடனக் கலைஞர்கள் இடம்பெற்ற இந்தப்பாடல் 8 நாட்களில் படமாக்கப்பட்டது. என்று விளக்கம் அளித்திருக்கிறது.
அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படம் ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சாதனை செய்த ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் நேரடி தெலுங்கு படமாக இயக்கியதன் மூலம் டோலிவுட் சினிமாவில் தன் முதல் காலடி தடத்தை பதித்துள்ளார். இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர், அவர் படங்களில் பல சாதனைகள் செய்யப்படும் என்பது தவிர்க்க முடியாது. அதை தனது தெலுங்கு சினிமாவிலேயே செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
அதாவது, கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை இயக்குநர் ஷங்கர் அமெரிக்காவில் நடத்த திட்டமிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இது இந்திய வரலாற்றில் தெலுங்கு சினிமா செய்யும் சாதனை என்றே கூறப்படுகிறது. ஏனென்றால் இதற்கு முன் எந்த தெலுங்கு படமும் அமெகரிக்காவில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியது இல்லை.
கேம் சேஞ்சர் படம்
கடந்த 2021இல் அறிவிக்கப்பட்டு தொடங்கிய இந்த படம் பல்வேறு தாமதத்துக்கு பிறகு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைந்தது. அரசியல் ஆக்ஷன் திர்ல்லர் பாணியில் உருவாகியிருக்கும் படத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார்.
படத்திலிருந்து ஏற்கனவே ஜரகண்டி, ரா மச்சா என இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒரு பாடல் வெளியாகியுள்ளது. கேம் சேஞ்சர் திரைப்படம் ஹைதராபாத், மும்பை, சண்டிகர், ஆந்திர பிரதேசம், நியூசிலாந்து உள்பட பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது.
டாபிக்ஸ்