கடைசி நேரத்தில் வந்த முட்டுக்கட்டை.. கேம் சேஞ்சர் ஜகா வாங்குகிறதா? எச்சரித்த தயாரிப்பு தரப்பு
கேம் சேஞ்சர் ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் முட்டுக்கட்டை வந்திருக்கும் நிலையில், படம் சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. இயக்குநர் ஷங்கரால் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜு தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம்.
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக இயக்கியிருக்கும் நேரடி தெலுங்கு படம் கேம் சேஞ்சர். அரசியல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் படத்தில் தெலுங்கு ஹீரோ ராம் சரண், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ளார்கள். அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா,ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் சங்கராந்தி ரீலிஸ் ஆக ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் வந்த சிக்கல்
கேம் சேஞ்சர் படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக ரிலீசாகிறது. இதையடுத்து படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு வார கூட இல்லாத நிலையில், தமிழ் பதிப்பு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணமாக லைக்கா நிறுவனம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கரின் முந்தைய படமான இந்தியன் 2 தோல்வியை தழுவியது. இந்த படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நஷ்டத்தை சந்தித்து.
இந்தியன் 2 படத்துடன் இணைந்து அதன் அடுத்த பாகமாக இந்தியன் 3 படத்தையும் எடுத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். இதில் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டும் ரீ ஷூட் செய்யப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மேலும் சில கோடிகள் ரூபாய் செலவாகும் எனவும், ஷங்கருக்கு தனியாக சம்பளமும் தர வேண்டும் என படத்தயாரிப்பாளர்களிடம் கேட்கப்பட்டுள்ளதாம்.
லைக்கா வைத்த செக்
இதைத்தொடர்ந்து இந்தியன் 2 படம் பிளாப் ஆகி இருப்பதால், இந்தியன் 3 படத்தின் தயாரிப்பு செலவை மட்டும் தருவதாக லைக்கா தரப்பில் சொன்னதாகவும், அதற்கு ஷங்கர் தரப்பில் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்த நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக லைக்கா நிறுவனத்தினர் திரைப்பட கவுன்சிலை நாடியுள்ளனராம்.
இந்தியன் 3 படத்தை முடித்து கொடுக்க இயக்குநர் ஷங்கர் ஒப்புதல் அளிக்காவிட்டால், அவரது கேம் சேஞ்சர் தமிழ் பதிப்பை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதி அளிக்க கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பு தரப்பில் எச்சரிக்கை
இயக்குநர் ஷங்கர் - லைக்கா இடையிலான தனிப்பட்ட பிரச்னையை வைத்து, தனது படமான கேம் சேஞ்சர் ரிலீஸில் சிக்கிலை ஏற்படுத்துவது நியாயமில்லை என தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளாராம். அத்துடன் இந்த விஷயத்தில் கடுப்பாகியிருப்பதுடன், கேம் சேஞ்சர் ரிலீஸுக்கு இந்த பிரச்னையை இழுக்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளாராம்.
இதற்கிடையே கேம் சேஞ்சர்ஸ் ரிலீஸ் பொங்கல் ரிலீஸில் இருந்து ஜகா வாங்கி தள்ளி போவதற்கான வாய்ப்பு உருவாகியுளஅளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. கேம் சேஞ்சர் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்னு்ம சென்சார் மட்டுமே பாக்கியுள்ளதாக படக்குழு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரு நாள்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் ராம் சரண், தந்தை மற்றும் மகன் என இரு கதாபாத்திரங்களில் தோன்றுகிறார். தந்தைக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
டாபிக்ஸ்