SJ Suryah: மதுரை கலெக்டரின் கதை.. உண்மை சம்பவம், நல்ல மெசேஜ் - கேம் சேஞ்சர் குறித்து எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்த விடியோ
SJ Suryah on Game Changer: மதுரை கலெக்டரின் உண்மை கதையாக கேம் சேஞ்சர் படம் உருவாகியுள்ளது. வில்லனாக சிறப்பாக நடித்துள்ளேன் என படம் குறித்து எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் முதல் தெலுங்கு படமான கேம் சேஞ்சர் திட்டமிட்டப்படி ஜனவரி 10ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. தெலுங்கு படமாக இருந்தாலும் தமிழ், இந்தி பதிப்புகளிலும் பான் இந்தியா படமாக ரிலீஸாகியுள்ளது. அத்துடன் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகியிருக்கும் முதல் படமாகவும் கேம் சேஞ்சர் இருந்து வருகிறது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், கேம் சேஞ்சர் படம் மதுரை நடந்த ரியல் கதையை அடிப்படையாக கொண்டது என படத்தில் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்திருக்கும் விடியோவில், "இதுவரை என்னோட படங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்துட்டு வர்ரீங்க. ஷங்கர் சார் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக, நான் வில்லன நடிச்ச கேம் சேஞ்சர் படம் மிக பரிமாண்டமாக உருவாகியுள்ளது. கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சமுத்திரகனி என பலரும் நடித்துள்ளார்கள்.
என முந்தையை படங்களுக்கு கொடுத்த சக்ஸைஸ இந்த படத்துக்கும் கொடுங்க. முக்கியமாக கார்த்திக் சுப்புராஜ் அவுட்லைன் வைத்து தான் இந்த படம் கதை அமைந்துள்ளது. மதுரையில் இருக்கும் கலெக்டர் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஆந்திராவில் நடப்பது போல் ஷங்கர் சார் தனது பாணியில் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்.
