Game Changer: ரிலீஸ்க்கு முன்பே மிரட்டல்.. HD பிரிண்ட் லீக் விவகாரம்.. 45 பேருக்கு செக்..
Game Changer: ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் ஹெச்டி பிரிண்டை லீக் செய்த விவகாரம் தொடர்பாக 45 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

Game Changer: மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியான இந்த பான் இந்தியா அரசியல் ஆக்ஷன் படத்தை, தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.
படம் லீக்
இந்தப் படம் நல்ல வசூல் பெறும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் HD பிரிண்ட் ஆன்லைனில் லீக் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரையரங்குகளில் வெளியான ஒரே நாளிலேயே ஆன்லைனில் HD பிரிண்ட் வந்துவிட்டது. இந்த விவகாரம் குறித்து கேம் சேஞ்சர் படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர். இதன் பின்னணியில் ஒரு கும்பல் இருப்பதாகவும், மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ரிலீஸிற்கு முன்பே மிரட்டல்
கேம் சேஞ்சர் படத்தின் HD பிரிண்ட் லீக் குறித்து, படக்குழுவினர் இன்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் படம் லீக்கான விவகாரத்தின் பின்னணியில் 45 பேர் கொண்ட கும்பல் இருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால், ஆன்லைனில் HD பிரிண்டை லீக் செய்வோம் என்று வெளியீட்டிற்கு முன்பே தங்களை மிரட்டியதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
வாட்ஸ் அப் மூலம் மிரட்டல்
கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர்கள் உட்பட, படக்குழுவினரில் சிலருக்கு வாட்ஸ்அப் மூலம் இந்த மிரட்டல்கள் வந்ததாகத் தெரிவித்துள்ளனர். “கேம் சேஞ்சர் வெளியீட்டிற்கு முன்பே, தயாரிப்பாளர்கள் உட்பட படக்குழுவின் முக்கிய நபர்களில் சிலருக்கு சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் மூலம் மிரட்டல்கள் வந்தன.
கேட்ட பணத்தைக் கொடுக்காவிட்டால், பைரசி பிரிண்டை லீக் செய்வோம் என்று மிரட்டினர்” என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் லீக் செய்ததுடன், டெலிகிராம், சமூக ஊடகங்களிலும் அந்தக் கும்பல் பகிர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுந்த சந்தேகம்
சமூக ஊடகங்களில் படத்தின் ரிலீஸ் முன்பே கதைக் திருப்பங்கள் குறித்து தகவல் வெளியிட்டது குறித்தும் கேம் சேஞ்சர் படக்குழுவினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். வேண்டுமென்றே மிரட்டல் விடுத்த 45 பேரும் இந்தப் படத்தைப் பற்றி எதிர்மறையான விஷயங்களைப் பரப்பினார்களா என்றும் சந்தேகிக்கின்றனர்.
“அந்த 45 பேரும் சேர்ந்து ஒரு கும்பலாக கேம் சேஞ்சர் படத்தைப் பற்றி எதிர்மறையான விஷயங்களைப் பரப்பினார்களா? பைரசி பிரிண்டை லீக் செய்தார்களா? அல்லது அவர்களுக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா? என்பது தெரியவர வேண்டும்” என்று படக்குழுவினர் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
45 பேர் மீது புகார்
இந்நிலையில் படக்குழுவினர் கேம் சேஞ்சர் படத்தை ஆன்லைனில் லீக் செய்வோம் என்று மிரட்டியவர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். லீக்கின் பின்னணியில் அந்தக் கும்பல்தான் இருப்பதாக அவர்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்ததாகவும் கூறியுள்ளனர். விசாரணைக்குப் பிறகு இந்த விவகாரம் குறித்த உண்மை வெளிவரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
கேம் சேஞ்சர் படக்குழு
கேம் சேஞ்சர் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் தயாரித்துள்ளனர். சுமார் ரூ.350 கோடி செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராம் சரண் உடன் அஞ்சலி, கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்