Game Changer Box Office: மளமளவென சரியும் கேம் சேஞ்சர் வசூல்! இனி அவ்வளவு தானா? 7 ஆவது நாள் வசூல் நிலவரம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Game Changer Box Office: மளமளவென சரியும் கேம் சேஞ்சர் வசூல்! இனி அவ்வளவு தானா? 7 ஆவது நாள் வசூல் நிலவரம்!

Game Changer Box Office: மளமளவென சரியும் கேம் சேஞ்சர் வசூல்! இனி அவ்வளவு தானா? 7 ஆவது நாள் வசூல் நிலவரம்!

Suguna Devi P HT Tamil
Jan 17, 2025 08:00 AM IST

Game Changer Box Office:ராம் சரண்-கியாரா அத்வானி நடித்த படம் கேம் சேஞ்சர் படத்திற்கு கடந்த சில தினங்களாகவே சரிவர வரவேற்பு இல்லாமல் சென்றது. கேம் சேஞ்சர் படம் அதன் 7 ஆவது நாளான நேற்றைய வசூல் சரியத் தொடங்கியது.

Game Changer Box Office: மளமளவென சரியும் கேம் சேஞ்சர் வசூல்! இனி அவ்வளவு தானா? 7 ஆவது நாள் வசூல் நிலவரம்!
Game Changer Box Office: மளமளவென சரியும் கேம் சேஞ்சர் வசூல்! இனி அவ்வளவு தானா? 7 ஆவது நாள் வசூல் நிலவரம்!

சரிவு

2025ஆம் ஆண்டு சங்கராந்திக்கு முதன்முதலில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தின் வசூல் சரிந்துள்ளதாகத் தெரிகிறது. சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகையை குறி வைத்து கடந்த  ஜனவரி 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியான கேம் சேஞ்சரின் வசூல் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. படம் ரசிகர்களின்  எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

40 சதவீதம் சரிவு

தெலுங்கு மாநிலங்களில் சங்கராந்தி விடுமுறைக்கு வெளியானா  திரைப்படங்களில் கேம் சேஞ்சர் மூன்றாவது விருப்ப படமாகத் தெரிகிறது. கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 16 முதல் வாரத்தில் நுழைந்தது. ஏழாவது நாளில், தெலுங்கு மாநிலங்களில் கேம் சேஞ்சர் படம் ரூ. 2 கோடி வரை வசூல் செய்து வாய்ப்பு உள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏழாவது நாளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை 35 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த வசூல் 

கேம் சேஞ்சர் ஆஃப்லைனில் நன்றாக இயங்குகிறது. இந்த டிரெண்டின் படி 7வது நாளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வசூல் உட்பட உலகம் முழுவதும் சேர்த்து  சுமார் ரூ. 4.74.75 கோடி வசூல் ஆகி உள்ளதாக sacnilk  தெரிவித்துள்ளது. ஆஃப்லைன் எண்கள் நன்றாக இருந்தால், அது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் கேம் சேஞ்சருக்கு 7வது நாளில் உலகம் முழுவதும் ரூ. 2.7 முதல் 3 கோடி வரை ஷேர் வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் 4 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிய பிரேக் ஈவன் இலக்கு

இந்தியில் வசூல் பரவாயில்லை என்று தோன்றினாலும், மற்ற பெரும்பாலான இடங்களில் சரிவு தொடர்கிறது. இந்தக் கணக்கீட்டில் பிரேக் ஈவன் இலக்கான ரூ.223 கோடியை எட்டுவது கேம் சேஞ்சருக்கு கடினமாக இருக்கும் என்று தெரிகிறது. இதற்கிடையில், கேம் சேஞ்சரின் வசூல் இந்தியாவில் ஆறாவது நாளில் 30 சதவீதம் சரிந்தது, ஏழாவது நாளில் ரூ. 3.55 கோடி நிகர வசூல் வர வாய்ப்புள்ளது என்றார் சக்னில்க் தெரிவித்துள்ளது.

7 நாள் வசூல்

மேலும் ஒரு வாரத்திற்குள் கேம் சேஞ்சர் திரைப்படம் இந்தியாவில் ரூ. 116.7 கோடிகள் நிகர வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக சக்னில்க் தெரிவித்துள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் ரூ. 190 கோடி வர வாய்ப்புள்ளது. இருப்பினும், கேம் சேஞ்சர் முதல் நாளில் 186 கோடி வசூலித்ததாக படக்குழு கூறியுள்ளது. அது ட்ரோலிங் ஆன நிலையில் அடுத்தடுத்த நாட்களின் வசூல் குறித்த விவரங்களை படக்குழு பின்னர் வெளியிடவில்லை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.