Game Changer: சறுக்கும் சாதனை சங்கர்.. கேட்டை சாத்தும் கேம் சேஞ்சர்.. அடி கொடுக்கும் புஷ்பா.. - வசூல் இவ்வளவுதானா?
பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk.com தளம் வெளியிட்ட தகவல்களின் படி, கேம் சேஞ்சர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியின் நடிப்பில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம், கடந்த வாரம் திரையரங்குகளில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியிடப்பட்டது; படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் படம் பெற்றாலும், கேம் சேஞ்சர், இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையே ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk.com தளம் வெளியிட்ட தகவல்களின் படி, கேம் சேஞ்சர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. இது கடந்த 5 நாட்களில் சாத்தியமாகி இருக்கிறது.
கேம் சேஞ்சர் பாக்ஸ் ஆபிஸ் புதுப்பிப்பு
கேம் சேஞ்சர் வெளியான ஐந்தாவது நாளான நேற்றைய தினம் 10 கோடி வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக இந்தியாவில் இந்தத்திரைப்படம், 105.44 கோடி வசூல் செய்திருக்கிறது. படம் வெளியான அன்றைய தினம் கேம் சேஞ்சர் திரைப்படம் 51 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், படத்திற்கு வந்த சில நெகட்டிவான விமர்சனங்கள் படத்தின் அதிக பட்ச வசூலை பாதித்து விட்டது. ஆம், இரண்டாவது நாளில் கேம் சேஞ்சர் திரைப்படம் 21.6 கோடியாக சரிந்த நிலையில், வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை வெறும் 15.9 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது; அடுத்தநாளான திங்கள் வசூலில் கடுமையான சரிவை சந்தித்த கேம் சேஞ்சர் திரைப்படம், வெறும் 7.65 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
கூடுதல் விவரங்கள்
கேம் சேஞ்சர் வெளியான ஐந்தாவது நாளில் 34.13 சதவீத மக்கள் படத்தை பார்த்திருக்கிறார்கள்; ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மற்றொரு பெரிய வெளியீடான பாலகிருஷ்ணா நடித்த தாக்கு மஹாராஜ் படம் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு கடுமையான போட்டியை கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2: தி ரூல் படமும் வசூலில் டஃப் கொடுத்து வருகிறது; ஜனவரி 17 முதல் 20 நிமிட கூடுதல் காட்சிகளை வெளியிடுவதாக குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கேம் சேஞ்சர் திரைப்படத்தில், கியாராவுடன் ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், பிரம்மானந்தம், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்