Game Changer -Vanangaan: முதல் நாளே இப்படியா?: புக்கிங்கில் கல்லா கட்டாத கேம்சேஞ்சர்,வணங்கான்.. வெறிச்சோடிய தியேட்டர்கள்
Game Changer -Vanangaan: முதல் நாளே இப்படியா?: புக்கிங்கில் கல்லா கட்டாத கேம்சேஞ்சர்,வணங்கான்.. வெறிச்சோடிய தியேட்டர்கள்
Game Changer -Vanangaan: ஜனவரி 10ஆம் தேதி இன்று வெளியான 2 முக்கிய திரைப்படங்களும் பெரிய அளவில் ஃப்ரீ புக்கிங் இல்லாமல் காத்து வாங்குகிறது.
பொங்கலை ஒட்டி பல்வேறு திரைப்படங்கள் ரிலீஸாகின்றன. ஜனவரி 10ஆம் தேதியான இன்று இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் திரைப்படம், வணங்கான். அடுத்ததாக வெளியாகியிருக்கும் மிகப்பெரிய திரைப்படம், ஷங்கர் இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம். இந்த படத்தைத்தாண்டி, மலையாள நடிகர் ஷேன் நிகாம் நடித்து கலையரசன் உடன் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம், ‘மெட்ராஸ்காரன்’.
இதைத்தொடர்ந்து வரும் ஜனவரி 12ஆம் தேதி, விஷால் நடிப்பில் வெகுநாட்கள் கிடப்பில் இருந்த ‘மத கஜ ராஜா ‘படமும், வரும் ஜனவரி 14 பொங்கலன்று ஜெயம் ரவி நடிப்பில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படமும் வெளியாகிறது.
தியேட்டர் கிடைப்பதில் போட்டி:
இதனால் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் தியேட்டர்கள் கிடைப்பதே மிகப்பெரிய போட்டியாக இருக்கிறது. இந்நிலையில் மிகப்பெரிய படங்களான ஷங்கரின் கேம் சேஞ்சர் படமும், பாலாவின் வணங்கான் படமும் ரிலீஸான இன்று முதல் நாளே முழுமையாக ரசிகர்கள் வராமல் தியேட்டரில் காத்துவாங்குவதாகத் தெரிகிறது.
அதன்படி வணங்கான் படத்தின் முதல் நாள் நண்பகல் 1:15 காட்சி, சென்னை கோயம்பேடு ரோஹிணி திரையரங்கில் ப்ரீ புக்கிங்கில் கூட முழுமையாகவில்லை. நிறைய இருக்கைகள் காலியாக இருக்கின்றன.
அதேபோல், சென்னை போரூர் ஜிகே சினிமாஸில் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம், மதியம் 12:30 மணி காட்சியில் முழுமையாக நிரம்பாமல் நிறைய காலி இருக்கைகளைக் கொண்டு இருக்கிறது. இதனால் வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கேம் சேஞ்சர் படத்தின் கதை என்ன?:
ஐபிஎஸ் அதிகாரி ராம் நந்தன் (ராம் சரண்) மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி ஐஏஎஸ் அதிகாரியாகிறார். கலெக்டராக பொறுப்பேற்றவுடன் ஊழல்வாதிகள் மீது இரும்புக்கரம் கொண்டு செயல்படுகிறார். வன்முறையையும், ஊழலையும் நிறுத்துமாறு ரவுடிகளையும், தொழிலதிபர்களையும் எச்சரிக்கிறார்.
முன்னதாக ராம் நந்தன் தீபகாவுடன் (கியாரா அத்வானி) ஒரு காதல் முறிவைக் கொண்டுள்ளார். இருவரும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.
மறுபுறம், முதலமைச்சராக இருக்கும் பொப்பிலி சத்தியமூர்த்தி (ஸ்ரீகாந்த்) ஆட்சியின் கடைசி ஆண்டில் இருக்கிறார். அப்போது, தனது எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரை வழங்குகிறார். ஒரு காலத்தில், அப்பண்ணாவுக்கு (ராம் சரண்) தான் செய்த அநீதிக்காக வருந்துகிறார்.
தனது தந்தை இருக்கும் முதலமைச்சர் இருக்கைக்கு ஆசைப்படும் மகனாக அமைச்சர் பொப்பிலி மொபிதேவி (எஸ்.ஜே.சூர்யா), தனது தந்தை பொப்பிலி சத்தியமூர்த்தியின் செயல்பாடுகளை விரும்பவில்லை. மறுபுறம், கலெக்டர் ராம் நந்தனும் ஊழலைத்தடுக்க மொபிதேவியை குறிவைக்கிறார்.
ராம் நந்தன் தனது சதித்திட்டங்களால் மொபிதேவி முதலமைச்சர் ஆக விடாமல் தடுக்கிறார். இந்த கட்டத்தில், சத்தியமூர்த்தியின் கடைசி ஆசை ஒரு பெரிய திருப்பத்தை சந்திக்கிறது.
ராம் நந்தனின் கடந்த காலம் வெளிப்படுகிறது. அதன்பின், தேர்தல் நடத்தப்படுகிறது. மொபிதேவியை ராம் நந்தன் தடுத்தது எப்படி? அவரது கடந்த காலம் என்ன? அப்பண்ணா(தந்தை வேடத்தில் ராம் சரண்) மற்றும் பார்வதி (அஞ்சலி) ஆகியோரின் போராட்டம் என்ன? அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களுக்கும் ராம் நந்தனுக்கு என்ன உறவு? தேர்தல் எப்படி நடந்தது? அப்பண்ணாவின் ஆசைகளை ராம் நிறைவேற்றிவிட்டாரா? என்பது கேம் சேஞ்சர் படத்தில் உள்ளது.
வணங்கான் படம் இன்று நண்பகல் 12 மணி வாக்கில் வெளியான நிலையில் இப்படத்துக்கும் பாஸிட்டிவ் விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன.
டாபிக்ஸ்