Gal Gadot: நான்காவது குழந்தைக்கு தாயானார் Wonder Women நடிகை! குழந்தை பேறுக்கு பின் சொன்ன விஷயம் தெரியுமா?
உலக சினிமா ரசிகர்களின் பேவரிட் நடிகையாக இருந்து வரும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த நடிகையான கேல் காடோட் நான்காவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
உலக அளவில் சூப்பர் ஹிட்டான ஒண்டர் உமன் ஹாலிவுட் படம் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர் கேல் காடோட். சூப்பர் ஹீரோயினி படமான இதில் தனது அற்புத நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்திருப்பார்.
இதையடுத்து நான்காவது முறையாக கர்ப்பமாகி இருந்த இவர் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தனது குழந்தைக்கு ஓரி என பெயர் வைத்துள்ளார்.
இவரது மற்ற மூன்று குழந்தைகளின் பெயர்கள் ஆல்மா, மாயா, டேனியலா ஆகும். ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளை பெற்றிருக்கும் இவர், தற்போது நான்காவதாகவும் பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
மருத்துவமனையில் தனது குழந்தையை ஓரியை அணைத்தவாறு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் கேல் காடோட், " எனது ஸ்வீட் கேர்ள். வெல்கம். கர்ப்பம் எளிதான விஷயம் அல்ல. அதை நாங்கள் செய்துள்ளோம். ஓரி என்ற உனது பெயர் ஹூப்ரூ மொழியில் ஒளி என்று பொருள். பெயருக்கு ஏற்ப எங்கள் வாழ்வில் ஒளியை கொண்டு வந்துள்ளாய்.
எங்கள் இதயங்கள் நன்றியால் நிறைந்துள்ளன. பெண்கள் சூழ்ந்திருக்கும் வீட்டுக்கு வருக. கூலான தந்தையும் அழகாக வீட்டில் இருக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பகிர்ந்த சில நிமிடங்களில் ரசிகர்களும், பிரபலங்களும் கேல் காடோட்டை வாழ்த்து மழையில் நனையவிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்