Padma Awards 2025: அஜித், அஸ்வின், சோபனா உட்பட பத்ம விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்.. உள்ளே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Padma Awards 2025: அஜித், அஸ்வின், சோபனா உட்பட பத்ம விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்.. உள்ளே!

Padma Awards 2025: அஜித், அஸ்வின், சோபனா உட்பட பத்ம விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்.. உள்ளே!

Marimuthu M HT Tamil
Jan 25, 2025 10:43 PM IST

Padma Awards 2025: பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் அஜித், அஸ்வின், சோபனா உட்பட பத்ம விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்.. உள்ளே தரப்பட்டுள்ளது.

Padma Awards 2025: அஜித், அஸ்வின், சோபனா உட்பட பத்ம விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்.. உள்ளே!
Padma Awards 2025: அஜித், அஸ்வின், சோபனா உட்பட பத்ம விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல்.. உள்ளே!

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன.

பத்ம விபூஷண் (சிறப்பான மற்றும் விதிவிலக்கான சேவை), பத்ம பூஷண் (உயர் வரிசையில் சிறந்த சேவை) மற்றும் பத்மஸ்ரீ (சிறப்பான சேவை) ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

பொது சேவைத்துறையின் அனைத்து நடவடிக்கைகளிலும் அல்லது துறைகளிலும் சாதனைகள் செய்ததை அங்கீகரிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்பட்ட பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரையின் பேரில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதில் தமிழ்நாட்டைச் சார்ந்த நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, நடிகை சோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதும்; அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், ஸ்ரீநிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தம், சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, ஸ்ரீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

 வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்குகிறார்.

பத்ம விபூஷண் விருது பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ:

  • துவ்வூர் நாகேஸ்வர ரெட்டி
  • நீதிபதி (ஓய்வு) ஜகதீஷ் சிங் கேஹர்
  • குமுதினி ரஜினிகாந்த் லக்கியா
  • லட்சுமிநாராயண சுப்பிரமணியம்(தமிழ்நாடு)
  • எம்.டி. வாசுதேவன் நாயர் (மறைவுக்குப் பின்)
  • ஒசாமு சுசுகி (மறைவுக்குப் பின்)
  • சாரதா சின்ஹா (மரணத்திற்குப் பின்)

பத்ம பூசண் விருது பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ:

  • எஸ். அஜித் குமார்(தமிழ்நாடு)
  • நந்தமுரி பாலகிருஷ்ணா
  • ஏ. சூர்ய பிரகாஷ்
  • ஆனந்த் நாக்
  • பிபேக் தேப்ராய் (மறைவுக்குப் பின்)
  • ஜதின் கோஸ்வாமி
  • ஜோஸ் சாக்கோ பெரியபுரம்
  • கைலாஷ் நாத் தீட்சித்
  • மனோகர் ஜோஷி (மறைவுக்குப் பின்)
  • நல்லி குப்புசாமி செட்டி(தமிழ்நாடு)
  • PR ஸ்ரீஜேஷ்
  • பங்கஜ் படேல்
  • பங்கஜ் உதாஸ் (மறைவுக்குப் பின்)
  • ராம்பகதூர் ராய்
  • சாத்வி ரிதம்பரா
  • சேகர் கபூர்
  • சோபனா சந்திரகுமார்(தமிழ்நாடு)
  • சுஷில் குமார் மோடி (மறைவுக்குப் பின்)
  • வினோத் தாம்

பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ:

  • அத்வைதா சரண் கடாநாயக்
  • அச்யுத் ராமச்சந்திர பலாவ்
  • அஜய் வி பட்
  • அனில் குமார் போரோ
  • அரிஜித் சிங்
  • அருந்ததி பட்டாச்சார்யா
  • அருணோதய் சாஹா
  • அரவிந்த் சர்மா
  • அசோக் குமார் மஹாபத்ரா
  • அசோக் லக்ஷ்மன் சரஃப்
  • அசுதோஷ் ஷர்மா
  • அசுவினி பிடே தேஷ்பாண்டே
  • பைஜ்நாத் மகராஜ்
  • பாரி காட்ஃபிரே ஜான்
  • பேகம் பதூல்
  • பாரத் குப்த்
  • பேரு சிங் சௌஹான்
  • பீம் சிங் பவேஷ்
  • பீமாவா தொட்டபாலப்பா சீலேக்கியதாரா
  • புதேந்திர குமார் ஜெயின்
  • சி எஸ் வைத்தியநாதன்
  • சைத்ராம் தியோசந்த் பவார்
  • சந்திரகாந்த் சேத் (மறைவுக்குப் பின்)
  • சந்திரகாந்த் சோம்புரா
  • சேத்தன் இ சிட்னிஸ்
  • டேவிட் ஆர் சைம்லீ
  • துர்கா சரண் ரன்பீர்
  • பரூக் அகமது மிர்
  • கணேஷ்வர் சாஸ்திரி திராவிட்
  • கீதா உபாத்யாய்
  • கோகுல் சந்திர தாஸ்
  • குருவாயூர் துரை(தமிழ்நாடு)
  • ஹர்சந்தன் சிங் பாட்டி
  • ஹரிமன் சர்மா
  • ஹர்ஜிந்தர் சிங் ஸ்ரீநகர் வாலே
  • ஹவிந்தர் சிங்
  • ஹசன் ரகு
  • ஹேமந்த் குமார்
  • ஹிருதய் நாராயண் தீட்சித்
  • ஹக் மற்றும் கொலின் காண்ட்ஸர் (மரணத்திற்குப் பின்)
  • இனிவளப்பில் மணி விஜயன்
  • ஜகதீஷ் ஜோஷிலா
  • ஜஸ்பிந்தர் நருலா
  • ஜோனாஸ் மாசெட்டி
  • ஜோய்னாசரண் பத்தாரி
  • ஜும்டே யோம்கம் காம்லின்
  • க. தாமோதரன்(தமிழ்நாடு)
  • கே.எல்.கிருஷ்ணா
  • கே.ஓமனக்குட்டி அம்மா
  • கிஷோர் குணால் (மறைவுக்குப் பின்)
  • எல் ஹேங்திங்
  • லட்சுமிபதி இராமசுப்பையர்(தமிழ்நாடு)
  • லலித் குமார் மங்கோத்ரா
  • லாமா லோப்சாங் (மரணத்திற்குப் பின்)
  • லிபியா லோபோ சர்தேசாய்
  • எம்.டி.ஸ்ரீனிவாஸ் (தமிழ்நாடு)
  • மதுகுல நாகபாணி சர்மா
  • மகாவீர் நாயக்
  • மம்தா சங்கர்
  • மண்டா கிருஷ்ண மடிகா
  • மாருதி புஜங்ராவ் சித்தம்பள்ளி
  • மிரியாலா அப்பாராவ் (மறைவுக்குப் பின்)
  • நாகேந்திர நாத் ராய்
  • நாராயண் (புலாய் பாய்) (மறைவுக்குப் பின்)
  • நரேன் குருங்
  • நீரஜா பட்லா
  • நிர்மலா தேவி
  • நிதின் நோஹ்ரியா
  • ஒன்கார் சிங் பக்வா
  • பி.தட்சணாமூர்த்தி
  • பாண்டி ராம் மாண்டவி
  • பார்மர் லாவ்ஜிபாய் நாக்ஜிபாய்
  • பவன் கோயங்கா
  • பிரசாந்த் பிரகாஷ்
  • பிரதிபா சத்பதி
  • புரிசை கண்ணப்ப சம்பந்தன்(தமிழ்நாடு)
  • ஆர்.அஸ்வின்(தமிழ்நாடு)
  • ஆர்.ஜி. சந்திரமோகன் (தமிழ்நாடு)
  • ராதா பகீன் பட்
  • ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி(தமிழ்நாடு)
  • ராம்தரஷ் மிஸ்ரா
  • ரானேந்திர பானு மஜும்தார்
  • ரத்தன் குமார் பரிமூ
  • ரெபா காந்த மஹந்தா
  • ரெந்த்லி லால்ராவ்னா
  • ரிக்கி கியான் கெஜ்
  • சஜ்ஜன் பஜங்கா
  • சாலி ஹோல்கர்
  • சந்த் ராம் தேஸ்வால்
  • சத்யபால் சிங்
  • சீனி விஸ்வநாதன் (தமிழ்நாடு)
  • சேதுராமன் பஞ்சநாதன்
  • ஷேக்கா ஷெய்கா அலி அல்-ஜாபர் அல்-சபா
  • ஷீன் காஃப் நிஜாம் (ஷிவ் கிஷன் பிஸ்ஸா)
  • ஷியாம் பிகாரி அகர்வால்
  • சோனியா நித்யானந்த்
  • ஸ்டீபன் நாப்
  • சுபாஷ் கேதுலால் சர்மா
  • சுரேஷ் ஹரிலால் சோனி
  • சுரிந்தர் குமார் வாசல்
  • சுவாமி பிரதீப்தானந்தா (கார்த்திக் மகராஜ்)
  • சையத் ஐனு ஹசன்
  • தேஜேந்திர நாராயண் மஜும்தார்
  • தியம் சூர்யமுகி தேவி
  • துசார் துர்கேஷ்பாய் சுக்லா
  • வாடிராஜ் ராகவேந்திராச்சார்யா பஞ்சமுகி
  • வாசுதேவ் காமத்
  • வேலு ஆசான் (தமிழ்நாடு)
  • வெங்கப்பா அம்பாஜி சுகதேகர்
  • விஜய் நித்யானந்த் சுரீஷ்வர் ஜி மகராஜ்
  • விஜயலக்ஷ்மி தேசமான்
  • விலாஸ் டாங்ரே
  • வினாயக் லோஹானி 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.