Top 10 Cinema : ஆராத்யாவிற்காக அதிரடி காட்டிய ஹைகோர்ட் முதல் கேம் சேஞ்சர் ஓடிடி வரை.. இன்றைய டாப் 10 சினிமா
Top Cinema News: ஆராத்யா உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஹைகோர்ட் உத்தரவு முதல் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் வரை இன்றைய நாளின் முக்கிய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

Top Cinema News: ஆராத்யா உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஹைகோர்ட் உத்தரவு முதல் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் வரை இன்றைய நாளின் முக்கிய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.
1. NEEK 4வது சிங்கிள்
நடிகர் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படத்தின் 3 பாடல்கள் வெளியாகி மக்களை வைப் ஆக்கி வந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் 4வது சிங்கிளான 'புள்ள' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருடன் மாத்யூ தாமஸ், வெங்கடேஷே் மேனன், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
2. ஆராத்யா உடல்நிலை கருத்து- ஹைகோர்ட் அதிரடி
பாலிவுட்டின் பிரபலமான தம்பதிகளில் ஒருவர் அபிஷே் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், சில ஆண்டுகளாகவே ஆராத்யாவின் உடல் மற்றும் மனநலம் குறித்த தவறான செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. இதற்கு எதிராக ஆராத்யா தாக்கல் செய்த வழக்கில் கூகுள் மற்றும் யூடியூப் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
3. கேம் சேஞ்சர் ஓடிடி
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர், முதல் முதலாக நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற நேரடி தெலுங்கு படத்தை இயக்கி பொங்கலுக்கு ரிலீஸ் செய்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறத் தவறிய நிலையில், வரும் பிப்ரவரி 7ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப் படவுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிக்கும் ஊழல் அரசியல்வாதிக்கும் எதிரான சம்பவங்களை முன்வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
4. தளபதி 69ல் நடித்தது ஏன்?
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் (தளபதி 69) படத்தில் நடித்தது குறித்து பூஜா ஹெக்டே மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய பூஜா ஹெக்டே, நானும் விஜய்யும் பீஸ்ட் படத்தில் நடித்ததை மக்கள் ரசித்தனர். அவர்கள் மீண்டும் இந்த ஜோடி எப்போது ஒன்று சேரும் என கேட்டுக் கொண்டே இருந்தனர். அவர்களின் அன்பிற்காக மட்டுமே நான் விஜய் சாருடன் இணைந்து இந்தத் திரைப்படத்தில் நடித்தேன். எங்களை இந்தப் படத்திலும் மக்களை கொண்டாடுவர் என்றார்.
5. நடிகை நிச்சயதார்த்தம்
தமிழில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்களில் நடித்து பெயர் பெற்றவர் பார்வதி நாயர். இவர் தற்போது தொழிலதிபரான தனது காதலரை கரம்பிடிக்க நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். பார்வதி நாயர் ஆஷ்ரித் அசோக் என்பவரை காதலித்து வந்த நிலையில், அவருடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து என்றைக்குமான உண்மையான ஒன்றை கண்டுபிடித்து விட்டதாக கூறியுள்ளார்.
6. வலியில் துடித்த குஷ்பு
நடிகை குஷ்புவிற்கு இடது முழங்கையில் டென்னிஸ் எல்போ எனும் தசை அழற்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அழற்சியால் கடுமையான வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டு, மருத்துவ ஆலோசனை பெற்று பிசியோதரபி சிகிச்சை எடுத்து வருவதாக கூறினார். இந்த சமயத்திலும் கையில் இருக்கமான க்ளவுஸ் அணிந்து ஷீட்டிங்கில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
7. சாதனை படைத்த தண்டேல்
நாக சைதன்யா- சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் படம் ரிலீஸிற்கு முன்பே சாதனை ஒன்றை படைத்துள்ளது. ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் மற்றும் தொடர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளதாக ஐஎம்பிடி வெளியிட்ட பட்டியல் கூறிகிறது. ஏற்கனவே தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் ட்ரெண்டாகி வரும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது தெரிகிறது.
8. 10 கோடி பார்வையாளர்
சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு திரைக்கு வந்த படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் என எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் மினுக்கி மினுக்கி பாடல் தற்போது 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்த இந்த பாடலுக்கு உமா தேவி வரிகள் எழுதி இருந்தார்.
9. படத்தை முடித்த விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2022ம் ஆண்டு ஆர்யன் எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் இந்தப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் தொடங்கிய இந்தப் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. ஷ்ரத்தா ஸ்ரீனாத், வாணி போஜன் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
10. ஹீரோயினாகும் பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக வந்தவர் ஆயிஷா. இந்த நிகழ்ச்சிக்கு முன்னே சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இவருக்கு ஜோடியாக இரும்புத்திரை, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன் நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஜாபர் இயக்குகிறார்.

டாபிக்ஸ்