ராபர், பெருசு, ஸ்வீட்ஹார்ட், வருணன்.. நாளை மார்ச் 14 உங்களை குஷிப்படுத்த காத்திருக்கும் படங்களின் முழு லிஸ்ட் இதோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ராபர், பெருசு, ஸ்வீட்ஹார்ட், வருணன்.. நாளை மார்ச் 14 உங்களை குஷிப்படுத்த காத்திருக்கும் படங்களின் முழு லிஸ்ட் இதோ!

ராபர், பெருசு, ஸ்வீட்ஹார்ட், வருணன்.. நாளை மார்ச் 14 உங்களை குஷிப்படுத்த காத்திருக்கும் படங்களின் முழு லிஸ்ட் இதோ!

Karthikeyan S HT Tamil
Published Mar 13, 2025 10:36 AM IST

Theatre Release Movies: நாளை (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன? எந்தெந்த படங்களை யார் யார் இயக்கி இருக்கிறார்கள் என்பன உள்ளிட்ட சுவராஸ்ய தகவல்கள் குறித்த ஓர் பார்வை.

ராபர், பெருசு, ஸ்வீட்ஹார்ட், வருணன்.. நாளை மார்ச் 14 உங்களை குஷிப்படுத்த காத்திருக்கும் படங்களின் முழு லிஸ்ட் இதோ!
ராபர், பெருசு, ஸ்வீட்ஹார்ட், வருணன்.. நாளை மார்ச் 14 உங்களை குஷிப்படுத்த காத்திருக்கும் படங்களின் முழு லிஸ்ட் இதோ!

ராபர்

பெண்கள் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராபர்'. கவிதா தயாரித்துள்ள இந்தப் படத்தில் சத்யா, டேனி, ஜெ.பி., தீபா, பாண்டியன், சென்றாயன், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனத்தை 'மெட்ரோ' இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார். பாண்டி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

பெருசு

இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில் பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் படம் 'பெருசு'. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அருண்ராஜ் இசையமைத்திருக்கும் இத்திரைப்படமும் திரையரங்குகளில் நாளை ரிலீஸ் ஆகிறது.

ஸ்வீட்ஹார்ட்

ஸ்வைத் எஸ்.சுகுமார் எழுதி இயக்கி உள்ள காதல் நகைச்சுவைத் திரைப்படம் 'ஸ்வீட்ஹார்ட்'. இதில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளது மட்டுமின்றி அவரே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு பாலாஜி சுப்பிரமணியம், எடிட்டிங் தமிழ் அரசன் செய்துள்ளார். இப்படம் நாளை (மார்ச் 14) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

வருணன்

தண்ணீர் சேமிப்பை மையமாகக் கொண்டு ஜெயவேல்முருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'வருணன்'. இதில், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியல்லா ஜோடியாக நடித்துள்ளனர். யாக்கை பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர். போபோ சஷி இசையமைத்துள்ளார். ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படமும் நாளை (மார்ச் 14) திரையரங்குகளில் வெளியாகிறது.

மாடன் கொடை விழா

தங்கப்பாண்டி இயக்கத்தில் கிராமத்து கதையை மையமாக கொண்ட படமாக உருவாகி உள்ளது ‘மாடன் கொடை விழா’ திரைப்படம். இப்படத்தை சிவப்பிரகாசம் உதயசூரியன் தயாரித்து உள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படம் மார்ச் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்

காதல் கதையை மையமாகக் கொண்டு கே.ரங்கராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்'. ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜிதா நடித்துள்ளார். இப்படத்தை வி மாணிக்கம் தயாரித்துள்ளார். நளினி, டெல்லி கணேஷ், சாம்ஸ், சிங்கம் புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் மார்ச் 14 அன்று திரைக்கு வருகிறது.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றவர். 2011 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கல்வி வானொலி ஞானவாணி பண்பலை, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா, டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் நிறுவனங்களைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அரசியல், அன்றாட நிகழ்வுகள், தமிழ்நாடு, தேசம், சர்வதேசம், ஆன்மிகம் மற்றும் யூடியூப் வீடியோ உள்ளிட்ட அனைத்து பிரிவுகளில் செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.