Top 10 Cinema: விஜய் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி ஆல்பம் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema: விஜய் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி ஆல்பம் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்..

Top 10 Cinema: விஜய் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி ஆல்பம் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்..

Malavica Natarajan HT Tamil
Published Feb 17, 2025 10:03 PM IST

Top 10 Cinema: தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மக்கள் விரும்பும் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி படத்தின் ஆல்பம் வெளியீடு வரை இன்றைய முக்கிய செய்திகளை இங்கு காண்போம்.

Top 10 Cinema: விஜய் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி ஆல்பம் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்..
Top 10 Cinema: விஜய் ஹீரோ ஆன கதை முதல் விடாமுயற்சி ஆல்பம் வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்..

1. மதராஸி டைட்டில்

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது 23வது படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு மதராஸி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

2. விடாமுயற்சி ஆல்பம் வெளியீடு

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார்- த்ரிஷா நடித்து வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், விடாமுயற்சி படத்தின் முழு பாடல் ஆல்பமும் வெளியாகி உள்ளது. முன்னதாக, இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்த பாடல்கள் மக்களிடம் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

3. வெற்றிமாறனின் சந்தேகம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து மெகாஹிட் அடித்த திரைப்படம் விடுதலை பாகம் 1 மற்றும் விடுதலை பாகம் 2. இந்த படத்தின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய வெற்றிமாறன், தன் உடல், மூளை உழைப்பையும் அரசியல், தத்துவப்பூர்வமாக தான் கற்றுக்கொண்ட அனைத்தையும் சேர்த்து எடுத்த படம் விடுதலை. இனி என்னால் அதுபோன்ற படத்தை எடுக்க முடியுமா எனத் தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார்.

4. சச்சின் ரீ-ரிலீஸ் ஜெனிலியா நெகிழ்ச்சி

கடந்த 2005ம் ஆண்டு விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான படம் சச்சின். இந்தத் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளாக உள்ள நிலையில், அந்தப் படத்தினை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தானு அறிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ஜெனிலியா, இந்தப் படம் தனக்கு நெருக்கமானசு என்றும். படப்பிடிப்பு சமயத்தில் தன்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டனர் என ஜெனிலியா தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

5. உதவி இயக்குநராக பணியாற்றும் ஷங்கர் மகன்

இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் இயக்குநராகும் முனைப்பில் இருந்துள்ளாராம். அதனால், அவரை ஷங்கர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டுள்ளார் என்ற தகவல் பரவி வந்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதை போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

6. அஜித்துடன் நடிப்பேன் உறுதியளித்த விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி விஜய், ரஜினி, கமல் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் நடித்துள்ள நிலையில், வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அஜித்துடனும் சேர்ந்து நடிப்பேன் என்று உறுதியளித்துள்ளார். அஜித் சார் நல்ல மனிதர். அவருடன் முன்னதாகவே ஒரு படம் நடிப்பதாக இருந்தது ஆனால் அது நிகழாமல் போனதாகவும் கூறினார்.

7. விஜய்யை ஹீரோவாக மாற்ற புரொமோஷன்

நடிகர் விஜய்யை சினிமாவில் பெரிய ஹீரோவாக்க தான் புரொமோஷன் செய்தேன் என அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார். பட விழாவில் பேசிய இவர், படத்தின் வெற்றி ஹீரோவின் தலையில் தான் இருக்க வேண்டும் என ஒவ்வொரு படத்திற்கும் புதிய டெக்னீஷியன்ஸை பயன்படுத்தினேன் எனக் கூறினார்.

8. உதயநிதிக்கு கெடுவிதித்த நீதிமன்றம்

உதயநிதி ஸ்டாலின் ஏஞ்சல் என்ற படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமான நிலையில், அவர் 80% படப்பிடிப்பில் மட்டும் தான் பங்கேற்றார். மீதமுள்ள படப்பிடிப்பில் பங்கேற்காமல் வேறு படத்தில் நடித்து தற்போது அரசியலுக்கு சென்றுவிட்டார் எனக் கூறி தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்து உதயநிதி பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9. தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள்

மாடல் அழகியும் நடிகையுமான கயாடு லோகர், தமிழில் டிராகன் மற்றும் இதயம் முரளி படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இந்நிலையில் அவர் தமிழ் ரசிகர்கள் எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர், அவர்களுக்காக நல்ல படங்களை கொடுப்பேன். தற்போது வெளியாகும் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

10. தனுஷ்- ஹெச். வினோத் பட அறிவிப்பு

தற்போது விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் ஜனநாயகன் படத்தை முடித்த பிறகு தனுஷை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் என்றும், அந்தப் படத்திற்கான அறிவிப்பு தனுஷ் பிறந்தநாளன்று வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.