Pa.Ranjith Vaanam Festival: கிளம்புகிறது பா.ரஞ்சித் படை; ஏப்ரல் 1 வானம் கலைத்திருவிழா! -திரையிடப்படும் படங்கள் லிஸ்ட்!
Pa.Ranjith Vaanam Festival: கலை மக்களுக்கானது, கவனிக்கப்படாத கலைஞர்கள் கலைகளை கவனப்படுத்துவதும், அங்கீகாரம் கொடுப்பதும் நம் கடமை என்கிற முனைப்போடு, கலை மற்றும் இலக்கிய விழாவை பா.இரஞ்சித் மற்றும் நீலம் குழுவினர் முன்னெடுத்து நடத்திவருகின்றனர்

Pa.Ranjith Vaanam Festival: கிளம்புகிறது பா.ரஞ்சித் படை.. ஏப்ரல் 1 வானம் கலைத்திருவிழா! -திரையிடப்படும் படங்கள் லிஸ்ட்!
Pa.Ranjith: இயக்குனர் பா.இரஞ்சித் முன்னெடுக்கும் 2025 ஆண்டுக்கான வானம் கலைத்திருவிழா ஏப்ரல் 1 முதல் துவங்க இருக்கிறது. இந்த திருவிழாவில், என்னென்ன நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பார்க்கலாம்.
நீலம் பண்பாட்டு மையம்
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடிவருகின்றது. இதனை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் பல்வேறு விஷயங்கள் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் எடுக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் அடுத்து வரும் ஏப்ரல் மாதம் எடுக்கப்படும் விழாக்கள் குறித்து பார்க்கலாம்.