ஷாக்.. லக்கி பாஸ்கர் படம் பார்த்து மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு.. நான்கு பேரை தீவிரமாக தேடி வரும் போலீசார்!
லக்கி பாஸ்கர் படம் பார்த்து மாணவர்கள் நான்கு பேர் மாயமானது பற்றி ஹாஸ்டல் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நான்கு மாணவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லக்கி பாஸ்கர் சினிமா கதாநாயகன் போல் பணம், வீடு, கார் ஆகிவற்றை சம்பாதித்து திரும்புகிறோம் என்று நண்பர்களிடம் கூறி ஹாஸ்டலில் இருந்து தப்பி ஓடிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மகாராணிப்பேட்டையில் பிரபல தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள் சமீபத்தில் லக்கி பாஸ்கர் சினிமா பார்த்துள்ளனர். அந்த திரைப்படத்தின் கதாநாயகன் லக்கி பாஸ்கர் பணம், கார், வீடு ஆகியவற்றை மிக எளிதில் சம்பாதிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
ஹாஸ்டலில் இருந்து தப்பி சென்ற மாணவர்கள்
அந்த காட்சிக்கு அடிமையான மாணவர்கள் நான்கு பேரும் நாங்களும் பாஸ்கரை போல் எளிதில் பணம், வீடு, கார் ஆகியவற்றை சம்பாதித்த பின் மீண்டும் இங்கு வருவோம் என்று சக நண்பர்களிடம் கூறி ஹாஸ்டலில் இருந்து தப்பி சென்று விட்டனர்.
மாணவர்கள் நான்கு பேர் மாயமானது பற்றி ஹாஸ்டல் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நான்கு மாணவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். லக்கி பாஸ்கர் போல் பணம் சம்பாதிக்க ஹாஸ்டலில் இருந்து தப்பி ஓடிய மாணவர்கள் நான்கு பேர் கிரண் குமார், கார்த்திக், சரண்தேஜ், ரகு ஆகியோர் என்று தெரியவந்துள்ளது. மாணவர்கள் நான்கு பேரையும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லக்கி பாஸ்கர்
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி துல்கர் நடிப்பில் லக்கி பாஸ்கர் திரைப்படம் வெளியானது. தீபாவளி ரேஸில் வெளியானாலும் சக படங்களோடு போட்டி போட்டு, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
லக்கி பாஸ்கர் படத்தின் கதை என்ன?
படத்தின் நாயகன் பாஸ்கர் குமார் ஒரு சாதாரண வங்கி ஊழியர். குடும்பப் பிரச்னை காரணமாக கடன் வலையில் சிக்கிக் கொள்கிறார். அவர் பணத்திற்காக ஆண்டனி என்ற நபருடன் கைகோர்த்து சட்டவிரோத பரிவர்த்தனைகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயைச் சம்பாதிக்கிறார். குறிப்பாக, வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பாஸ்கர் ஊழல்கள் அம்பலமாகுமா? பாஸ்கர் பணம் சம்பாதித்து குடும்பத்தை புறக்கணித்ததன் விளைவு என்ன? பாஸ்கர் எப்படி எல்லா பிரச்னைகளிலும் இருந்து மீண்டு வருகிறார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இப்படத்தில் இருக்கிறது.
தற்போது தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் துல்கர் சல்மான் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மலையாள படங்களைவிட டோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.