Toxic: ஒரே செட்டில் நான்கு ஹீரோயின்கள்.. விறுவிறுப்பாக நடக்கும் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படப்பிடிப்பு - ரிலீஸ் எப்போ?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Toxic: ஒரே செட்டில் நான்கு ஹீரோயின்கள்.. விறுவிறுப்பாக நடக்கும் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படப்பிடிப்பு - ரிலீஸ் எப்போ?

Toxic: ஒரே செட்டில் நான்கு ஹீரோயின்கள்.. விறுவிறுப்பாக நடக்கும் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படப்பிடிப்பு - ரிலீஸ் எப்போ?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 03, 2025 08:11 PM IST

Toxic Movie: யாஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தின் செட்டில் நான்கு ஹீரோயின்கள் பங்கேற்ப படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பட நடிகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்

ஒரே செட்டில் நான்கு ஹீரோயின்கள்.. விறுவிறுப்பாக நடக்கும் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படப்பிடிப்பு
ஒரே செட்டில் நான்கு ஹீரோயின்கள்.. விறுவிறுப்பாக நடக்கும் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படப்பிடிப்பு

ஒரே செட்டில் நான்கு ஹீரோயின்கள்

அந்த வகையின் கன்னட சினிமாவில் ராக்ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் தற்போது டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் இணைந்து நான்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில், யாரெல்லாம் நடிக்கிறார் என்கிற தகவலை படக்குழுவினர் வெளிப்படுத்தாமலே இருந்து வந்தார்.

இதையடுத்து யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தில் நயன்தாரா, பாலிவுட் நடிகைகளான கியாரா அத்வானி, ஹூமா குரோஷி, தாரா சுதாரியா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் உலா வந்தன. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் இந்த நான்கு ஹீரோயின்களும் இணைந்துள்ளதாகவும், இவர்கள் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தகம் பரிசளித்த ஹூமா குரேஷி

சமீபத்தில் ஸீபா என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்ட நடிகை ஹூமா குரேஷி, அந்த புத்தகத்தை டாக்ஸிக் பட நடிகர், நடிகைகளுக்கு கொடுத்துள்ளாராம். இதை பெற்று கொண்ட பிரபலங்களும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஹூமா குரேஷி குறித்து பாராட்டியுள்ளனர்.

தள்ளிப்போகும் டாக்ஸிக் ரிலீஸ்

நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் பீரியட் கேங்ஸ்டர் ஆக்‌ஷன் பாணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் டாக்ஸிக் படம் முதலில் வரும் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகலாம் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

படத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் நடிகர் டேரெல் டி'சில்வா, மற்றொரு பிரிட்டீஷ் நடிகர் பெனடிக்ட் காரெட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களாம்.

கடந்த மாதம் நடிகர் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு டாக்ஸிக் படத்தின் முதல் கிளிம்ப்ஸ் விடியோ வெளியிடப்பட்டது. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்தியா படமாக டாக்ஸிக் இருந்து வருகிறது.

டாக்ஸிக் படத்தை தொடர்ந்து இந்தியில் உருவாகும் ராமாயணா படத்தில் யாஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் ராவணனாக நடிக்கிறார்.

டாக்ஸிக் பட கதை

டாக்ஸிக் படம் 1950-70 காலகட்டத்தில் நடக்கும் கதையாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. போதைப்பொருளுக்கு எதிரான பின்னணியில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் படம் உருவாக இருக்கும் இந்த படத்தில் யாஷ் ஸ்டைலிஷ் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகரான இவர் நடிக்கும் முதல் தென்னிந்திய படமாக டாக்ஸிக் உள்ளது. இவர்தான் படத்தின் நயன்தாரா நடிப்பது குறித்த தகவலை வெளிப்படுத்தினார்.

சர்ச்சையில் சிக்கிய டாக்ஸிக் படக்குழு

முன்னதாக, இந்த படத்தின் பிரமாண்ட செட் அமைப்பதற்கு காப்பு காட்டு பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மரங்களை படக்குழுவினர் பணியாளர்களை வைத்து வெட்டியுள்ளனராம். மரங்கள் வெட்டப்பட்ட தகவல் வெளியான நிலையில், எந்த முன் அனுமதியும் இல்லாமல் படக்குழுவினர் அத்துமீறி வனப்பகுதியில் மரம் வெட்டும் செயலில் ஈடுபட்டதாக வனத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயத்தை வனத்துறையினர் கர்நாடக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து டாக்ஸிக் படத்தை தயாரித்து வரும் கேவிஎன் புரொடக்‌ஷன் நிறுவனத்துக்கும், படத்தின் இயக்குநர் கீது மோகன்தாஸிடமும் உரிய விளக்கம் கேட்டு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இதனால் படத்தின் படப்பிடிப்பும் தொய்வு அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது நான்கு ஹீரோயின்கள் நடிக்க ஷுட்டிங் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.