Thug Life: உலகநாயகனுடன் ஜோடிசேருகிறாரா மாஜி உலக அழகி?!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thug Life: உலகநாயகனுடன் ஜோடிசேருகிறாரா மாஜி உலக அழகி?!

Thug Life: உலகநாயகனுடன் ஜோடிசேருகிறாரா மாஜி உலக அழகி?!

Marimuthu M HT Tamil
Jan 11, 2024 08:15 PM IST

நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகநாயகனுடன் ஜோடிசேருகிறாரா மாஜி உலக அழகி?!
உலகநாயகனுடன் ஜோடிசேருகிறாரா மாஜி உலக அழகி?!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் பல முக்கியமான படங்களை இயக்கிய இயக்குநர். அஞ்சலி, ரோஜா, பாம்பே, நாயகன், தளபதி, அலைபாயுதே, குரு, ஓகே கண்மணி, ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற பல்வேறு படங்களை இயக்கியவர்.

இவரது சினிமாக்கள் பலவும் தமிழைத்தாண்டி இந்திய அளவிலும் உலக அளவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தன.

இந்நிலையில் நாயகன் 36 ஆண்டுகளுக்குப் பின், கமல்ஹாசனை கதாநாயகனாக வைத்து மணிரத்னம் இயக்கும் படத்தின் பெயர், தக் லைஃப். இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி ஆகியோர் இணைத்து நடித்து வருகின்றனர்.

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸும் இணைந்து தயாரிக்கின்றன. ரெட் ஜெயன்ட் இப்படத்தை வெளியிடவுள்ளது. இப்படத்துக்குண்டான இசையை ஏ.ஆர்.ரஹ்மான் செய்கிறார்.

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மணிரத்ன படங்களின் ஆஸ்தான ஹீரோயினான ஐஸ்வர்யா ராய் இப்படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி இணைந்தால் இருவர், குரு, ராவணன், பொன்னியின் செல்வன் ஒன்று மற்று இரண்டு ஆகியப் படங்களைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் படத்தில் ஆறாவது முறையாக நடிக்கிறார். அதுமட்டுமின்றி, திரைத்துறையில் கமல்ஹாசனுடன் முதன்முறையாக ஐஸ்வர்யா ராய் ஜோடி சேரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கமல்ஹாசனின் ரசிகர்கள், இந்த ஜோடிக்கு இடையில் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெறுமா ஆர்வத்தில் இருக்கின்றனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.