தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Foods For Healing And Injury Recovery

Injury Recovery Foods: அறுவைசிகிச்சை முடிந்து சீக்கிரம் குணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்? - டாக்டர் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 20, 2024 04:18 PM IST

சாதரணமாக ஒருவர் 68 கிலோ இருக்கிறார் என்றால், அவருக்கு நாள் ஒன்றுக்கு 68 கிராம் புரதம் தேவைப்படும். அப்படி இருக்கும் பொழுது, காயங்களில் இருந்து மீளும் காலத்தில், இன்னும் அதிகமான புரதச்சத்து உடலுக்கு தேவைப்படும்.

காயத்தில் இருந்து மீள உதவும் உணவுகள்!
காயத்தில் இருந்து மீள உதவும் உணவுகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “உடம்பில் ஏற்படக்கூடிய புண்கள், அறுவை சிகிச்சைகள் காயங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து நீங்கள் குணமாகி வெளியே வருவதற்கு மருந்துகள் மட்டும் போதாது. நல்ல சத்தான உணவுகளும் அவசியம்.

சாதரணமாக ஒருவர் 68 கிலோ இருக்கிறார் என்றால், அவருக்கு நாள் ஒன்றுக்கு  68 கிராம் புரதம் தேவைப்படும். அப்படி இருக்கும் பொழுது, காயங்களில் இருந்து மீளும் காலத்தில், இன்னும் அதிகமான புரதச்சத்து உடலுக்கு தேவைப்படும். 

அப்படி இருக்கும் பொழுது அந்த காலத்தில் 68 கிலோ எடை கணக்கிற்கு, 136 கிராம் புரதமானது நம் உடலுக்கு தேவைப்படும். அதாவது இரண்டு மடங்கு புரதம் நம் உடலுக்கு தேவைப்படும். அந்த வகையில் நீங்கள் ஒரு நாளைக்கு நீங்கள் இரண்டு முட்டை எடுத்துக் கொள்வது நல்லது.

பாதாம் பருப்பு, சூரியகாந்தி விதைகள் உள்ளிட்ட கொட்டை வகை உணவுகள் நமது உடலுக்கு எரிபொருளை தரக்கூடிய சக்தி வாய்ந்த உணவுகள். அதில் வைட்டமின் ஈ, துத்தநாகம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் சத்துக்களும் இதில் இருக்கின்றன. 

பருப்புகள், சுண்டல், காளான்கள் வகைகள், இனிப்பு உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றையும் நீங்கள் இந்த காலகட்டத்தில் எடுத்துக் கொள்ளலாம். போதுமான அளவு மாவுச்சத்தையும் இந்த நேரத்தில் சேர்த்துக் கொள்வது நல்லது.

அதேபோல கீரை வகை உணவுகளையும் இந்த காலகட்டத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இது உடலின் வீக்கத்தை குறைக்க வல்லது. இந்த இலை மற்றும் காய்கறிகளில் செரிவூட்டப்பட்ட ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் உட்பட பல சத்துக்கள் இருக்கின்றன. 

ப்ளூபெர்ரி, ஆப்பிள், அன்னாசி, கொய்யா உள்ளிட்ட பழங்களை நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். இது உங்களுக்கு நல்ல பயன்களை கொடுக்கும். அத்துடன் நன்றாக வேக வைக்கப்பட்ட இறைச்சியையும் இந்தக் காலக்கட்டத்தில் எடுத்துக்கொள்ளலாம். 

கடல் உணவுகளை இந்தக்காலக்கட்டத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக மீன்கள் சிற்பிகள் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒமேகா 6 இருக்கின்ற உணவுகளை தவிர்த்து விடுங்கள். ஒமேகா 3 இருக்கின்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று பேசினார். 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.