முந்தியடிக்கும் திரைத்துறை.. 'ஆபரேஷன் சிந்தூர்', 'மிஷன் பஹல்காம்' பெயருக்கு கூடும் மவுசு..!
பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் நடத்திய பதில் தாக்குதல் நாட்டு மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அந்தப் பெயரை சினிமாவுக்கு பயன்படுத்த தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் துல்லியமாகத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குள், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தலைப்பைப் பதிவு செய்ய தயாரிப்பாளர்கள் மும்முரமாக திரண்டதால் திரைப்படத் துறையில் பரபரப்பு ஏற்பட்டது.
குவிந்த விண்ணப்பங்கள்
இந்திய மோஷன் பிக்சர் தயாரிப்பாளர்கள் சங்கம் (IMPPA) 12 விண்ணப்பங்களையும், மேற்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (WIFPA) 2 விண்ணப்பங்களையும், இந்திய தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை 10 விண்ணப்பங்களையும் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செயல்முறையின்படி, தயாரிப்பாளர்கள் நான்கு அமைப்புகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் படத் தலைப்புகளைப் பதிவு செய்ய வேண்டும்.