‘அது சிம்பொனி இசை இல்லை..ஒழுங்கா கத்துக்கிட்டு பண்ணுன்னு அப்பவே சொல்லிட்டேன்’ - வதந்திக்கு இளையராஜா விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அது சிம்பொனி இசை இல்லை..ஒழுங்கா கத்துக்கிட்டு பண்ணுன்னு அப்பவே சொல்லிட்டேன்’ - வதந்திக்கு இளையராஜா விளக்கம்!

‘அது சிம்பொனி இசை இல்லை..ஒழுங்கா கத்துக்கிட்டு பண்ணுன்னு அப்பவே சொல்லிட்டேன்’ - வதந்திக்கு இளையராஜா விளக்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 11, 2025 11:41 AM IST

அந்த இசையை கேட்ட சில நொடிகளிலேயே அதனை நான் நிறுத்த சொல்லி விட்டேன்; அத்துடன் அவனிடம், இது சிம்பொனி இசை இல்லை. முதலில் சிம்போனி இசை என்றால் என்ன என்பதை கற்றுக் கொண்டு, அதன் பின்னர் சிம்பொனி இசையை உருவாக்கு என்று கூறினேன். - இளையராஜா விளக்கம்!

‘அது சிம்பொனி இசை இல்லை..ஒழுங்கா கத்துக்கிட்டு பண்ணுன்னு அப்பவே சொல்லிட்டேன்’ - வதந்திக்கு இளையராஜா விளக்கம்!
‘அது சிம்பொனி இசை இல்லை..ஒழுங்கா கத்துக்கிட்டு பண்ணுன்னு அப்பவே சொல்லிட்டேன்’ - வதந்திக்கு இளையராஜா விளக்கம்!

அது சிம்பொனி இசை இல்லை 

அந்த வீடியோவில் அவர், ‘ஒரு முறை லிடியன் நாதஸ்வரம் என்னிடம் பாடம் கற்றுக் கொள்வதற்காக வந்திருந்தான். அப்போது அவன், நானும் ஒரு சிம்பொனி இசையை உருவாக்கி இருக்கிறேன் என்று அவன் ப்ரோகிராம் செய்த சிம்பொனி இசையை என்னிடம் போட்டுக் காண்பித்தான். 

அந்த இசையை கேட்ட சில நொடிகளிலேயே அதனை நான் நிறுத்த சொல்லி விட்டேன்; அத்துடன் அவனிடம், இது சிம்பொனி இசை இல்லை. முதலில் சிம்போனி இசை என்றால் என்ன என்பதை கற்றுக் கொண்டு, அதன் பின்னர் சிம்பொனி இசையை உருவாக்கு என்று கூறினேன். 

காரணம், அவன் என்னிடம் காண்பித்த இசையானது முழுக்க முழுக்க சினிமா பின்னணி இசை போன்று இருந்தது. அதை என்னிடம் கொண்டு வந்து, என்னுடைய ஒப்புதலுக்காக, என்னுடைய அங்கீகாரத்திற்காக காண்பித்தது போல இருந்தது. அப்போதுதான் இதனை நான் சொன்னேன். பெரியவர்களாக நாம் அவனுக்கு சரியாக வழி காட்ட வேண்டும் இல்லையா..?’ என்று பேசினார்.

மேலும் பேசிய அவர், ‘ நான் என்னுடைய காலிலேயே முயற்சி செய்து, வேறொரு நபரின் காலின் உதவியில்லாமல், படிப்படியாக இசையை கற்று, கச்சேரிகளில் வாசித்து, சினிமாவில் நுழைந்து அங்கு உதவியாளராக இருந்து படிப்படியாக முயற்சி செய்து, சினிமாவில் இசையமைப்பாளர் ஆனேன். 

ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி உலகில் என்னென்ன இசை உயர்ந்த இசையாக இருக்கிறது என்பதை பார்த்து கற்று இந்த இடத்தை அடைந்திருக்கிறேன். என்னுடைய காலில் எந்த அணிகலன்களும் இல்லை’ என்று பேசினார்.

சிம்பொனி இசையை வெளியிடுவேன் 

முன்னதாக, இளையராஜாவை தொடர்ந்து பிரபல இசைக்கலைஞரான லிடியன் நாதஸ்வரம் தன்னுடைய சிம்பொனி இசைத்தொகுப்பை வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், சிம்பொனி நம்பர் 01. புதிய தொடக்கம்.. 4 மூவ்மெண்ட்ஸ்’ என்று குறிப்பிட்டு இருக்கும் அவர் 21.06.2026 உலக இசை நாளான அன்று என்னுடைய சிம்பொனி இசையை வெளியிட இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார். 

ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் இசைப்பள்ளியில் பயின்றவர் லிடியன் நாதஸ்வரம். பியானோ, டிரம் போன்ற பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கத்தெரிந்த இவர், தன்னுடைய 13 ஆவது வயதில் சிபிஎஸ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் பங்கேற்று தனது பியானோ வாசிக்கும் திறமையை வெளிப்படுத்தினார். அதில் இவருக்கு 6 கோடியே 96 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்திய இவர் மோகன்லால் நடித்த பரோஸ் படத்திற்கு இசையமைத்து இருந்தார்.இளையராஜாவுக்கும் மிகவும் நெருக்கமான இவர் அவரிடமும் இசையை கற்றார். இது தொடர்பாக முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட லிடியன், ‘இளையராஜா என்னிடம் நான்தான் முதல் மற்றும் ஒரே மாணவர்’ என்று கூறியதாக நெகிழ்ந்திருந்தார்.