கயல் ஆனந்தி த்ரில்லர் படம், சர்ச்சை பாடல் கொண்ட ஜாலியோ ஜிம்கானா.. தமிழில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கயல் ஆனந்தி த்ரில்லர் படம், சர்ச்சை பாடல் கொண்ட ஜாலியோ ஜிம்கானா.. தமிழில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்

கயல் ஆனந்தி த்ரில்லர் படம், சர்ச்சை பாடல் கொண்ட ஜாலியோ ஜிம்கானா.. தமிழில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 26, 2024 11:32 AM IST

2024 ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக திரையரங்கில் 10 புதிய படங்கள் வெளியாகின்றன. அதே போல் ஓடிடி தளங்களில் தமிழில் மட்டும் 5 படங்கள் ஸ்டிரீமிங் ஆக உள்ளன.

கயல் ஆனந்தி த்ரில்லர் படம், சர்ச்சை பாடல் கொண்ட ஜாலியோ ஜிம்கானா.. தமிழில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்
கயல் ஆனந்தி த்ரில்லர் படம், சர்ச்சை பாடல் கொண்ட ஜாலியோ ஜிம்கானா.. தமிழில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்

திரையரங்குகளில் வரிசை கட்டி படங்கள் வெளியாவது போல் ஓடிடி தளங்களிலும் சில பிரபலமான படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் தமிழ் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

சொர்க்கவாசல்

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்போடு கடந்த மாதம் வெளியான படம் சொர்க்கவாசல். சித்தார்த் விஸ்வநாத் என்ற புதிய இயக்குநர் இயக்கியிருக்கும் இந்த படம் 1999இல் சென்னையில் உள்ள சிறையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு க்ரைம் ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் படமாக உள்ளது. 

இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சானியா ஐயப்பன், யோகி பாபு, நட்ராஜ் சுப்பிரமணியம், கருணாஸ் உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படம் விமர்சகரீதியாக பாராட்டை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கோட்டை விட்ட இந்த படம் டிசம்பர் 27ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது

ஒயிட் ரோஸ்

கயல் ஆனந்தி கதையின் நாயகியாக நடித்து கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்த படம் ஒயிட் ரோஸ். படத்தில் ஆர்.கே. சுரேஷ், ரூசோ ஸ்ரீதரன், பேபி நக்‌ஷத்ரா, தாரணி ரெட்டி உள்பட பலரும் நடித்துள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். இந்த படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.

ஜாலியோ ஜிம்கானா

பிரபு தேவா, மடோனா செபாஸ்டியன், யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகி பாபு உள்பட பலர் நடித்து வெளியான காமெடி படம் ஜாலியோ ஜிம்கானா. ஷக்தி சிதம்பரம் இயக்கியிருக்கும் இந்த படம் கடந்த மாதம் வெளியானது. படத்தில் இடம்பிடித்த போலீஸ்காரன கட்டிக்கிட்டா என்ற பாடல் இரட்டை அர்த்தங்களுடன் இருப்பதாக சர்ச்சையும் கிளம்பியது. இதையடுத்து இந்த படம் தற்போது ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 27 முதல் ஸ்டிரீமிங் ஆக உள்ளது

வட்டார வழக்கு

டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவி, சந்தோஷ் நம்பிராஜன் நடித்திருக்கும் படம் வட்டார வழக்கு. இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை கண்ணுசாமி ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான இந்த படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 27இல் வெளியாகிறது

ரூபன்

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான பக்தி படம் ரூபன். விஜய் பிரசாத், காயத்ரி ரேமா நடித்திருக்கும் இந்த படத்தை ஐயப்பன் இயக்கியுள்ளார். இந்த படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் டிசம்பர் 27இல் வெளியாகிறது.

பிறமொழி படங்கள்

ரசிகர்களை பெரிதும் கவர்ந்து ஸ்குவிட் கேம் சீசன் 2 என்ற கொரியன் த்ரில்லர் சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது.

பாலிவுட் படமான, அஜய் தேவகன், அக்‌ஷய் குமார், ரன்வீர் சிங், டைகர் ஷெராப், கரீன் கபூர், தீபிகா படுகோன், அர்ஜுன் கபூர் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்த சிங்கம் அகெயன் நெட்பிளிக்ஸில் டிசம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.