Anupama Parameswaran: ‘ எந்தா சேட்டா செளக்கியமா’.. லாக் டவுன் கதையில் அனுபமா பரமேஸ்வரன்.. புதிய பாடல் இங்கே!
Anupama Parameswaran: என்.ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கும் நிலையில், இந்தப்பாடலுக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். - புதிய பாடல் இங்கே!

Anupama Parameswaran: ‘ எந்தா சேட்டா செளக்கியமா’.. லாக் டவுன் கதையில் அனுபமா பரமேஸ்வரன்.. புதிய பாடல் இங்கே!
‘பிரேமம்’ படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘தில்லு ஸ்கொயர்’ திரைப்படம் வெற்றி பெற்றது. குறிப்பாக, இந்தப்படத்தில் அவர் நடித்த முத்தக்காட்சி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக நடித்திருக்கும் தமிழ் திரைப்படம் லாக் டவுன். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான லாவா லாவா பாடல் வெளியாகி இருக்கிறது. என்.ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கும் நிலையில், இந்தப்பாடலுக்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். பிரபல பாடலாசிரியர் சினேகன் பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்.