Dulquer Salmaan: கண்ணாலே சொன்னனே நூறு சாரி…கோட் பட ஹீரோயினுடன் லூட்டி.. ரொமன்ஸ் மூடில் துல்கர் சல்மான்!
Dulquer Salmaan: கோபத்தில் இருக்கும் மனைவியின் மீதுள்ள கணவரின் பாசத்தை விவரிக்கும் பாடலாக அமைந்த இந்தப்பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார். - ரொமன்ஸ் மூடில் துல்கர்!

Dulquer Salmaan: கண்ணாலே சொன்னனே நூறு சாரி…கோட் பட ஹீரோயினுடன் லூட்டி.. ரொமன்ஸ் மூடில் துல்கர் சல்மான்!
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், ’லக்கி பாஸ்கர்’ படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் பாடலான ‘கொல்லாதே’ அண்மையில் வெளியானது.
'மகாநடி’, ‘சீதா ராமன்’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் துல்கர் சல்மான் பான் இந்தியா ஹீரோவாக மாறியிருக்கிறார். அவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்த படத்தை, பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
