Aishwarya Rai: அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் காதலுக்கு தூதுவனாக இருந்த வில்லன் நடிகர் யார் தெரியுமா?
Aishwarya Rai: அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சனின் முதல் சந்திப்புக்கு காரணமாக அமைந்தது இந்திய சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான பாபி தியோல் தான். அது எப்படி என்று தெரியுமா?

Aishwarya Rai: பாலிவுட் நடிகர் பாபி தியோல் நேற்று தனது 56வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நாளில் அவரைப் பற்றி தெரியாத ஒரு தகவலை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
பாபி தியோல், கடந்த பல ஆண்டுகளாக, ஒரு தனிநபராக மட்டுமல்ல, ஒரு நடிகராகவும் மிகவும் வளர்ந்து உச்சம் பெற்றுள்ளார். காதல் நாயகனாக திரைப்பயணத்தை தொடங்கிய இவர், ரன்பீர் கபூருடன் அனிமல் (2023) படத்தில் ஒரு வார்த்தை கூட பேசமால் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். இதனால், இப்போது, இந்திய சினிமா விரும்பும் வில்லன் நடிகராகவே மாறிவிட்டார்.
காதல் நாயகன் பாபி தியோல்
ஆனாலும், பல ரசிகர்களின் மனதில் காதல் நாயகன் பாபிக்கு என்றும் ஒரு இடம் உண்டு! காதல் நாயகனாக அவரது நடிப்பில் மிகவும் மறக்கமுடியாத படங்களில் ஒன்று Aur Pyaar Ho Gaya. இந்தப் படம் 1997ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் பாபி தியோலிந் கதாநாயகியாக நடித்திருப்பார் ஐஸ்வர்யா ராய்.
காதல் தூதுவர்
இந்தப் படத்தில் தனது சக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் திரையில் காதல் நடிப்பில் ஈடுபட்டிருந்தாலும், திரைக்குப் பின்னால் பாபி அவருக்கு தெரியாமலேயே காதல் தூதுவராக செயல்பட்டிருக்கிறார்.
ஆமாம், நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள். பாபி தியோல் மூலமாகத்தான் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது இப்போதைய கணவர் அபிஷேக் பச்சனை முதல் முறையாக சந்தித்தார். 2021 ஆம் ஆண்டில், பிர்பிஷப்ஸ் எனும் யூடியூப் சேனலில், யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியே உடனான சந்திப்பில் இதனை அபிஷேக் பச்சன் தெரிவித்திருப்பார்.
சுவிட்சர்லாந்தில் தனிமை
அந்த உரையாடலின் போது, “நான் அவளை (ஐஸ்வர்யா) முதன்முதலில் சந்தித்தது என் அப்பாவின் படத் தயாரிப்பிற்கு உதவ சென்றபோது தான். என் தந்தை அமிதாப் பச்சனின் படத்திற்காக ஷூட்டிங் ஸ்பாட் பார்க்க சுவிட்சர்லாந்த் சென்றேன், நான் அங்கு இரண்டு நாட்கள் தனியாக இருந்தேன்.
பாபியால் ஐஸ்வர்யாவை பார்த்தேன்
அப்போதுதான் என்னுடைய சிறுவயது நண்பர் பாபி தியோல் அவரது Aur Pyar Ho Gaya படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். நான் அங்கு இருப்பதை அறிந்த அவர், என்நை இரவு உணவிற்கு அழைத்தார். அந்த சமயத்தில் அவர்கள் படப்பிடிப்பில் இருந்தபோது தான் நான் முதல் முதலில் ஐஸ்வர்யா ராயை சந்தித்தேன்.” என்றார்.
அவளை யாருக்குத் தான் பிடிக்காது
இந்த உரையாடலின் போது, ரன்வீர் அபிஷேக்கிடம் அவரது இப்போதைய மனைவி ஐஸ்வர்யா மீது அப்போது காதல் கொண்டிருந்தாரா என்று கேட்டார். அதற்கு “அவள் மீது யாருக்குத் தான் காதல் இல்லை? அதை விடுங்கள்” என்று பதிலளித்தார். ஐஸ்வர்யாவின் திரை காதலன் பாபி அவரது நிஜ வாழ்க்கை காதல் கதையில் ஒரு பங்கைக் கொண்டிருப்பார் என்று யார் நினைத்திருப்பார்கள் சொல்லுங்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்