OTT Movies: களமிறங்கும் டென்ட்கொட்டா.. ஃபயர் முதல் ஜென்டில்வுமன் வரை.. வரிசை கட்டும் ஓடிடி படங்கள்! - லிஸ்ட் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Movies: களமிறங்கும் டென்ட்கொட்டா.. ஃபயர் முதல் ஜென்டில்வுமன் வரை.. வரிசை கட்டும் ஓடிடி படங்கள்! - லிஸ்ட் இங்கே!

OTT Movies: களமிறங்கும் டென்ட்கொட்டா.. ஃபயர் முதல் ஜென்டில்வுமன் வரை.. வரிசை கட்டும் ஓடிடி படங்கள்! - லிஸ்ட் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 13, 2025 11:08 PM IST

OTT Movies: அமெரிக்காவில் இந்திய திரைப்படங்களை கண்டு மகிழ்வதற்கான முன்னணி ஓடிடி தளமான டென்ட் கொட்டா செயல்பட்டு வருகிறது. இந்த தளம் அண்மை காலமாக தமிழ் படங்களை வாங்கி வெளியிடவும் ஆரம்பித்து இருக்கின்றன.

OTT Movies: களமிறங்கும் டென்ட்கொட்டா.. ஃபயர் முதல் ஜென்டில்வுமன் வரை.. வரிசை கட்டும் ஓடிடி படங்கள்! - லிஸ்ட் இங்கே!
OTT Movies: களமிறங்கும் டென்ட்கொட்டா.. ஃபயர் முதல் ஜென்டில்வுமன் வரை.. வரிசை கட்டும் ஓடிடி படங்கள்! - லிஸ்ட் இங்கே!

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'வணங்கான்' தற்போது டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் நிலையில், வரும் காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களை டென்ட் கொட்டா ஓடிடியில் வெளியிட இருக்கிறது.

வணங்கான் படம் 

அமெரிக்காவில் இந்திய திரைப்படங்களை கண்டு மகிழ்வதற்கான முன்னணி ஓடிடி தளமான டென்ட் கொட்டா செயல்பட்டு வருகிறது. இந்த தளம் அண்மை காலமாக தமிழ் படங்களை வாங்கி வெளியிடவும் ஆரம்பித்து இருக்கின்றன. 

சமீபத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்று பாராட்டுகளை குவித்த 'வணங்கான்' திரைப்படத்தை டென்ட் கொட்டா வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, வரும் காலத்திலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று எதிர்பார்க்கப்படும் பல்வேறு படங்களை டென்ட் கொட்டா வெளியிட திட்டமிருப்பதாக கூறியிருக்கிறது.

என்னென்ன படங்கள் வருகிறது? 

அதன் படி, தம்பி ராமையா கதை, திரைக்கதை, வசனம் எழுதி, உமாபதி ராமையா டைரக்ட் செய்த ராஜாகிளி, பாலாஜி முருகதாஸ், ரக்‌ஷிதா, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஃபயர், கவுண்டமணியின் ஒத்த ஓட்டு முத்தையா, லிஜோமோல் ஜோஸ், ரோகிணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான காதல் என்பது பொதுவுடமை, ஜென்டில்வுமன், தினசரி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை டென்ட்கொட்டா வெளியிட இருக்கிறது. 

குறிப்பாக இந்த வாரம் ராஜா கிளி, காதல் என்பது பொதுவுடமை படங்கள் வெளியாக இருக்கின்றன. மேலும் விவரங்களுக்கு, www.tentkotta.com என்ற இணையதளத்தை பார்க்கவும் அல்லது டென்ட் கொட்டாவின் சமூக வலைதள பக்கங்களை பின் தொடரவும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Kalyani Pandiyan S

TwittereMail
சு. கல்யாணி பாண்டியன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்திருக்கும் இவர், 7 வருடங்களுக்கு மேலாக, காட்சி ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம், பிசினஸ், விளையாட்டு, அரசியல், தேசம் - உலகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதும் திறமை கொண்ட இவர், முன்னதாக புதியதலைமுறை, ஏபிபி நாடு உள்ளிட்ட செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பொழுது போக்கு செய்திகளை வழங்கி வருகிறார். இவருக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஆகும். திரைப்படங்கள் பார்ப்பது, நாவல்கள் படிப்பது, சிறுகதைகள் எழுதுவது, சினிமா சார்ந்த உரையாடல்கள் கேட்பது, நீண்ட தூர பைக் பயணங்கள், பழமையான கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வது உள்ளிட்டவை இவரது பொழுது போக்கு ஆகும்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.