தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நிர்வாண போஸ்: ரன்வீர் சிங்குக்கு எதிராக பல பிரிவுகளில் வழக்குப்பதிவு

நிர்வாண போஸ்: ரன்வீர் சிங்குக்கு எதிராக பல பிரிவுகளில் வழக்குப்பதிவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 26, 2022 04:56 PM IST

நிர்வாணமாக போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை அவமதிப்பு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்காக நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டில் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார் ரன்வீர் சிங். மறைந்த அமெரிக்க நடிகர் பெர்ண்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இதை செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த அவர் அதற்கான விளக்கமும் அளித்திருந்தார். ரன்வீரின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதோடு, புகைப்படம் தொடர்பாக பல்வேறு விதமான கருத்துகளும் பகிரப்பட்டன.

இதையடுத்து ரன்வீர் சிங் மீது வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த வழக்கறிஞரான வேதிகா செளபே என்பவர் ரன்வீர் சிங் மீது எழுத்து பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதில், பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், அவர்களின் அடக்க குணத்தை அவமதிப்பு செய்யும் விதமாகவும் புகைப்படங்களை ரன்வீர் சிங் பகிர்ந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகாரைத் தொடர்ந்து ரன்வீர் சிங் மீது பிரிவு 292 (ஆபாசமான பொருள்களைக் கையாள்வது பொது கண்ணியம் மற்றும் ஒழுக்கம் பற்றிய பிரச்னையை ஏற்பட செய்வது), 293 (இளவயதினரிடம் ஆபாசமாக நடந்துகொள்வது), 509 (பெண்களின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயலை வெளிப்படுத்துவது), ஆகியவற்றிலும், தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 (A) பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்