Atharva: ‘மச்சி ஒரு குவாட்டர் சொல்லு’ - ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா - ஹீரோயின் யார் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Atharva: ‘மச்சி ஒரு குவாட்டர் சொல்லு’ - ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா - ஹீரோயின் யார் தெரியுமா?

Atharva: ‘மச்சி ஒரு குவாட்டர் சொல்லு’ - ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா - ஹீரோயின் யார் தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Mar 01, 2024 11:45 AM IST

தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், ஊக்குவிப்பதிலும், அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம் - அதர்வா!

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா!
இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் அதர்வா!

நியூ ஏஜ் எண்டர்டெயினராக இந்தப் படம் உருவாகிறது. தற்காலிகமாக இந்தப் படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 5' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார் மற்றும் ஒளிப்பதிவை சுகுமாரன் கையாள்கிறார்.

படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, ​​“திரையுலகில் மிகுந்த அனுபவமும் கொண்ட பி.ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். 

தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், ஊக்குவிப்பதிலும், அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது" என்றார்.

இயக்குநர் எம். ராஜேஷ் கூறும்போது, ​​“காலத்திற்கு ஏற்றாற் போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. 

பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். 

இந்த வாய்ப்பை வழங்கிய பி. ரங்கநாதன் சாருக்கும், கதையில் நடிக்க ஒத்துக் கொண்ட அதர்வா முரளி சாருக்கும் நன்றி. இந்தப் படம் மூலம் ரசிக்கத்தக்க பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார்.

ஸ்ரீவாரி பிலிம் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன், ​​“இத்தனை வருடங்களில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் நான் கவனித்த வரையில் எண்டர்டெயினர் படங்களைத் தமிழ் ரசிகர்கள் நிபந்தனையின்றி கொண்டாடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். 

அவர்களின் 2-3 மணிநேர சினிமா அனுபவத்தை முற்றிலும் ரசிக்க வைக்கும் ஒரு கண்ணியமான பொழுதுபோக்கு படத்தை அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையிலான படம்தான் இது. 

அனைத்து வயதினரையும் கவரும் வகையில் ஒரு திரைக்கதையை ராஜேஷ் உருவாக்கியுள்ளார். பல திறமைகள் மற்றும் சிறந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அதிதி ஷங்கருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது ஜெயம் ரவியின் படப்பணியில் ராஜேஷ் பிஸியாக இருக்கிறார். அது முடிந்ததும் விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம்" என்றார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.