Filmfare Awards 2024: பிலிம்பேர் விருதுகளை வாரி குவித்த தமிழ் சினிமா.. மாஸ்காட்டிய நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ!
Filmfare Awards South 2024 winners: சித்தார்த்தின் தமிழ் திரைப்படமான ‘சித்தா’ 7 விருதுகளை வென்றது. நானியின் தெலுங்கு படம் தசரா 6 விருதுகளை பெற்றுள்ளது.

Filmfare Awards South 2024 winners: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் சென்டரில் தென்னிந்திய திரைத்துறையினரை கௌரவிக்கும் வகையில் பிலிம் பேர் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 69வது விருது வழங்கும் இந்த நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகர், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கில் திரைப்படபிரிவில் நானியின் தசரா 6 விருதுகளையும், ஆனந்த் தேவரகொண்டாவின் பேபி திரைப்படம் 5 விருதுகளையும் வென்றுள்ளது. சந்தீப் கிஷன் மற்றும் ஃபாரியா அப்துல்லா ஆகியோர் தொகுத்து வழங்கிய விருது வழங்கும் விழாவில் தமிழ் சினிமா பிரிவில் நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படம் ஏழு விருதுகளையும், 'பொன்னியின் செல்வன் பகுதி 2' ஐந்து விருதுகளையும் வென்றன.
முழு வெற்றியாளர்களின் பட்டியல் இதோ..!
தமிழ் சினிமா
சிறந்த படம் - சித்தா