குறுக்க மறுக்க ஓடும் திடீர் தளபதி.. சிவகார்த்திகேயனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  குறுக்க மறுக்க ஓடும் திடீர் தளபதி.. சிவகார்த்திகேயனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..

குறுக்க மறுக்க ஓடும் திடீர் தளபதி.. சிவகார்த்திகேயனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 22, 2025 09:37 PM IST

நடிகர் சிவகார்த்திகேயனின் சமீபத்திய செயல்களை குத்திக் காட்டி திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவரை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறுக்க மறுக்க ஓடும் திடீர் தளபதி.. சிவகார்த்திகேயனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..
குறுக்க மறுக்க ஓடும் திடீர் தளபதி.. சிவகார்த்திகேயனை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்..

மெரினா படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் தற்போது அமரன் படத்தின் மூலம் 300 கோடிக்கும் மேல் வசூலித்த ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடிக்க வைத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் ஹீரோ இமேஜ் இந்திய அளவில் பிரபலமானது.

அரசியல் மேடையில் சிவகார்த்திகேயன்

இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயன், தலைவர்களான நல்லக்கண்ணு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் போன்றோரை சந்தித்து அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவ்

அத்துடன், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 2 புலிகளை தத்தெடுத்துள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கிடையில் நேற்று, நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் ஆணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சனை பாராட்டி அவரது சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

குறுக்க மறுக்க ஓடும் திடீர் தளபதி

இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட ப்ளூ சட்டை மாறன், "அமரன் படத்திற்கு முன்புவரை தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்தார் திடீர் தளபதி.

அதன்பிறகு.. நல்லக்கண்ணு ஐயா, பினரயி விஜயன் ஆகியோரை சந்திப்பது, புலிகளை தத்தெடுப்பது, செஸ் வீரரை பாராட்டுவது என வாரத்திற்கு நான்கு முறை குறுக்க மறுக்க ஓடிக்கொண்டு இருக்கிறார்." எனக் கூறியுள்ளார்.

அமரன் வெற்றி காரணமா?

அமரன் படம் கொடுத்த வெற்றியால் தான் சிவகார்த்திகேயன் தன்னை பொது மேடைகளில் முன்னிலைபடுத்தி வருகிறார் என்றும், நடிகர் விஜய்யிடம் இருந்து துப்பாக்கி வாங்கியதால் இவரை பலரும் அடுத்த விஜய் என கூறி வந்தனர். அதனைக் குறிப்பிடும் வகையில் சிவகார்த்திகேயனை திடீர் தளபதி எனவும் விமர்சித்துள்ளார்.

ப்ளூசட்டை மாறன் விமர்சனம்

சில நாட்களுக்கு முன், தான் சமூக வலைதளங்களில் குறிப்பாக எக்ஸ் தளத்தில் ஆக்டிவ்வாக இல்லாமல் இருப்பதாக கூறினார். அத்துடன் நில்லாமல், அதிக நேரம் சமூக வலைதளத்தை பயன்படுத்தாதீர்கள். குறிப்பாக எக்ஸ் தளத்தை. இது என் அன்பான வேண்டுகோள். இதனால், எலான் மஸ்க் என் கணக்கை முடக்கலாம். அப்படி நடந்தால் அதுவே என் முதல் வெற்றியாக இருக்கும் என்றும் கூறி வந்தார்.

சிவகார்த்திகேயன் அறிவுரை

அப்படி இருக்கையில், திடீரென அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பது பற்றி பலரும் பேசி வந்தனர். ஆனால், திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒருபடி மேலே சென்று பேசியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவை பார்த்த பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.