Bayilvan Ranganathan: 'பருவம் தவறிடுச்சு’ - நக்மாவை கலாய்த்த பயில்வான்
நடிகை நக்மாவை திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கலாய்த்துள்ளார்.
நடிகர் நக்மாவின் திருமண ஆசையினை, பிரபல சினிமா திரைவிமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கலாய்த்துள்ளார்.
தமிழ் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், சர்ச்சைக்குரிய மற்றும் பேசாத திரைக்குப் பிந்தைய விஷயங்களையும் வெளிப்படையாக யூட்யூபில் பேசுவதில் கெட்டிக்காரர். அப்படி, அவர் கையில் எடுத்த விவகாரம் தான், திருமணம் ஆகாத நடிகை பற்றியது.
ஆம். நடிகை நக்மாவின் திருமணம் குறித்து தான், பயில்வான் ரங்கநாதன் நக்கலாகப் பேசியுள்ளார். அதன்படி, அண்மையில் தான் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக நடிகை நக்மா தனது நெருங்கிய வட்டாரங்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் இத்தனை நாட்களாக திருமணப்பேச்சுவார்த்தைப் பற்றி பேச்சு எடுக்காததற்கு, அவரது முந்தைய கால காதல் தோல்விகள் தான் காரணம் எனப் பேசப்பட்டது. 90களில் உச்சநடிகையாக இருந்த நக்மா அப்போதே நடிகர் சரத் குமாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகப் பேசப்பட்டது. அதன்பின்,முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியுடன் கிசுகிசுக்கப்பட்டார். மேற்கூறிய காதல்கள் வெற்றியாகாத நிலையில் நீண்டநாட்களாக டிப்ரஸனில் தவித்து வந்திருந்த நக்மாவுக்குத்தான் திருமண ஆசை வந்துள்ளது.
இதுபற்றி வீடியோ ஒன்றை வெளியிட்ட திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், ‘ரஜினியுடன் ஜோடிபோட்ட 49 வயதாகும் நக்மாவுக்குத் தற்போது தான் கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணம் வந்துள்ளது. அதனை அவர் பருவத்திலேயே பயிர் செய்திருக்க வேண்டும். நக்மாவை கல்யாணம் செய்ய பெரிய நடிகர்கள் எல்லாம் வரமாட்டார்கள். அப்படி வந்தால் நிச்சயமாக திருமணம் செய்துகொள்ளவேண்டும்’ என கிண்டலாகப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரல் ஆகிவருகிறது.
என்னதான் இருந்தாலும் செலிபிரட்டியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசுவது அநாகரிகமானது என சிலர் அந்த வீடியோவுக்குக் கீழ் கமெண்ட் செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்