தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Film Critic Bailvan Ranganathan Said That What Aamir Spoke Was A Lie

Director Ameer:'அமீர் பேசியது பொய் தாங்க' - கிழித்த பயில்வான் ரங்கநாதன்!

Marimuthu M HT Tamil
Mar 03, 2024 05:52 AM IST

அமீர் பேசியது பொய்தான் என பயில்வான் ரங்கநாதன் ஜெம் சினிமாஸ் என்னும் யூட்யூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார்.

'அமீர் பேசியது பொய் தாங்க' - கிழித்த பயில்வான் ரங்கநாதன்!
'அமீர் பேசியது பொய் தாங்க' - கிழித்த பயில்வான் ரங்கநாதன்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஜெம் சினிமாஸ் என்னும் யூட்யூப் சேனலுக்கு திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில், ‘’தமிழில் மாயவலை, இறைவன் மிகப்பெரியவன் என்று அமீர் இயக்கி ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் இரண்டு படங்களைத் தயாரித்தவர், அண்மையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் ஜாஃபர் சாதிக். இவர் திமுகவில் மத்திய மண்டல அயலக அணி துணை அமைப்பாளராக இருந்து இருக்கிறார். 

இவரை விசாரணைக்கு வருமாறு, போதைக்கடத்தல் தடுப்புத்துறை நோட்டீஸ் ஒட்டியது. அதன்பின், ஜாஃபர் சாதிக்கை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கியது திமுக. மேலும், ஜாஃபர் சாதிக் ‘மங்கை’ என்னும் படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்து இருக்கிறார். இவரது விழாக்களில் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திமுக ஆதரவு நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.  

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி இருக்கும் ஜாஃபர் சாதிக்கின் புரசைவாக்கம் வீடு, அவரது சினிமா அலுவலகம் ஆகியவை சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜாஃபர் சாதிக்கை தேடப்படும் குற்றவாளியாகப் போலீசார் அறிவித்துள்ளனர். ஜாஃபர் சாதிக் மட்டும் தேடப்படும் குற்றவாளி அல்ல, அப்துல் சலீம் என்னும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  நிர்வாகியும் இவ்வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுதொடர்பான செய்திகள் வந்தவுடன், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தனக்குப் புரியவில்லை என்றும்; தான் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என இயக்குநர் அமீர் விளக்கமளித்துள்ளார். 

இந்நிலையில் அமீரிடம் சில கேள்விகள் உள்ளன. தேவையில்லாமல் படத்தைத் தாண்டி, பல விஷயங்களில் பேசிகிறீர்கள். உங்களைப் பற்றி செய்தி வரும்போது ஏன் பத்திரிகையாளர்கள் பேசக் கூடாது. உங்களுக்கு ஒரு நியாயம் - ஊருக்கொரு நியாயமா?. இறைவன் மிகப்பெரியன் என்னும் படத்தை எடுக்க, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பணத்தையா ஜாஃபர் சாதிக் பயன்படுத்தவேண்டும்?. அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். 

ஜாஃபர் சாதிக், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையிலும், ராதாகிருஷ்ணன் சாலையிலும் இரண்டு தேநீர் விடுதியை ஆடம்பரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஜாஃபர் சாதிக் தனது நண்பர் என்றும்; அவருடன் தான் இணைந்து பணியாற்றுவதாகவும் இயக்குநர் அமீர் சொன்னார்.

நண்பர் என்று அமீர் சொல்கிறார். திடீரென்று அமீரிடம் பழகிய அனைவரையும் அமீர், நண்பர் என்று சொல்லிவிடுவாரா?. நண்பர் என்ன தொழில் செய்கிறார், அவருக்கு எப்படி பணம் வருகிறது என்பது தெரியாமலா தேடப்படும் குற்றவாளி ஜாஃபர் சாதிக்கை நண்பர் என்று சொன்னீர்கள் மிஸ்டர் அமீர்?.

எந்தவகையில் ஜாஃபர் சாதிக்கை நண்பர் என்று சொன்னீர்கள். அதை முதலில் சொல்லுங்கள். ஜாஃபர் சாதிக்கின் தயாரிப்பில் இரண்டு படங்களை இயக்கி இருக்கிறீர்கள்?. நீங்கள் நிறையப் படங்களை இயக்கி இருக்கிறீர்கள், நல்ல நடிகராக இருக்கிறீர்கள். அப்படிப்பட்டவர், நண்பர் குறித்தா தெரியாமல் இருப்பார்.  ஏன் அப்பட்டமான பொய் சொல்கிறீர்கள் அமீர்?

ஏன் நீங்கள் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை முன்கூட்டியே போதைப்பொருள் தடுப்புக் காவல்துறையினரிடம் சென்று, உங்கள் நண்பர் பற்றி அறிந்த விசயங்களை சொல்லக்கூடாது. சொல்லியிருக்கலாமே. இறைவன் மிகப்பெரியவன் என்னும் படத்தை இயக்கும் தாங்கள், அந்த இறைவனுக்குப் பயந்து, தங்களுக்குத் தெரிந்த தகவல்களை போலீஸாரிடம் தெரிவிக்கலாம் தானே. யார் அவர், உங்களுக்குத் தெரிந்த அவரது பின்புலம். அவருக்கு எங்கு இருந்து பணம் வருகிறது என்பதைச் சொல்லலாம் தானே. அதைச் சொல்ல மறுத்துவிட்டு, தற்போது பத்திரிகையாளரைப் பேசாதீர்கள் எனச் சொல்வது எப்படி?. பத்திரிகைகள் புலனாய்வு செய்வது இயல்பு.

நீங்கள் ஜாஃபர் சாதிக்கின் தயாரிப்பில் இரண்டு படங்களை இயக்கி இருக்கிறீர்கள். அவரைப் பற்றி எப்படி தங்களுக்குத் தெரியாமல் இருக்கும்? அதைவிட்டுட்டு, உண்மையை மறைத்து யோக்கியன்போல, தன்னைப் பற்றி எதுவும் சொல்லாதீர்கள் என்று சொல்வது என்ன நியாயமா?

அப்படியிருக்க, தன்னைப் பற்றி பத்திரிகையில் எழுதக்கூடாது என அமீர் சொல்ல முடியுமா?. இல்லையென்றால், பத்திரிகையாளரைச் சந்தித்து விளக்கம் கொடுங்கள். அமீர், நீங்கள் நிச்சயமாக போலீஸ் விசாரணையில் சிக்கப்போவது உறுதி.  யோக்கியனைப் போல் பேசுவது சரியாகாது. யோக்கியனாக நடந்துகொள்ளவேண்டும். உங்களது செயல்பாடுகள் உண்மையாகவும் நியாயமாகவும்  இருந்தால் தான், உங்களுக்கு இறைவனின் அருளாசி கிடைக்கும். முதலில் ஜாஃபர் சாதிக் குறித்து  தெரிந்த விஷயங்களை, ரகசியங்களை அமீர் போலீஸாரிடம் சென்று சொல்லுங்கள்’ எனப் பேசியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்