Good Bad Ugly Celebration: தொடங்கியது குட் பேட் அக்லி கொண்டாட்டம்.. திரையரங்கிற்கு படையெடுக்கும் ரசிகர்கள்.. பிரபலங்கள்
Good Bad Ugly Celebration: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தைக் காண சினிமா பிரபலங்களும் ரசிகர்கள பலரும் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.

Good Bad Ugly Celebration: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள நிலையில், அஜித் குமாரின் ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் தியேட்டருக்கு குவிந்து வருகின்றனர். அவர்கள் அஜித் படத்தை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும், மேல தாளங்கள் அணிவகுத்தம், சாலைகளில் பேரணியாக வந்தும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் தியேட்டருக்குள் பலரும் கடவுளே அஜித்தே என்ற முழக்கங்களோடு தான் செல்கின்றனர்.
தியேட்டருக்கு வந்த அஜித் மனைவி ஷாலினி
நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தைக் காண அவரது மனைவி ஷாலினி, அவரது மகளோடு தியேட்டருக்கு வந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ஷாலினி ரசிகர்களோடு சேர்ந்து சென்னை ரோகினி தியேட்டரில் படம் பார்க்க வந்துள்ளார்.
தியேட்டருக்கு வந்த டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்
அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சென்னையில் உள்ள கமலா தியேட்டருக்கு வந்துள்ளார். தியேட்டருக்கு வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
குட் பேட் அக்லி- ஃபுல் மீல்
குட் பேட் அக்லி படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த அர்ஜூன் தாஸ், படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக சென்னையில் உள்ள ரோகினி தியேட்டருக்கு வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தப் படத்திற்காக மிகவும் எக்சைட்மெண்ட்டாக இருக்கிறேன். தொல்வதற்கு வார்த்தைகளே இல்லை எனக் கூரிய அவர், இந்தப் படம் ரசிகரகளுக்கு ஃபுல் மீல் கொடுத்தது போல இருக்கும் என்றார்.
ரோகினி தியேட்டருக்கு படை எடுத்த ஆதிக் ரவிச்சந்தர்
குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ரோகினி தியேட்டருக்கு வந்தார்.
படம் பார்க்க வந்த அமைச்சர்
குட் பேட் அக்லி படத்தைப்ப பார்க்க திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் தியேட்டருக்கு வந்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவன், இன்று தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் குட் பேட் அக்லி படத்தை பார்க்க வந்தார். அப்போது, அஜித் ரசிகர்கள் வைத்திருந்த கேக்கை வெட்டி கொண்டாட்டத்தில் பங்கெடுத்தார்.
