Fighter Collection: ஃபைட்டர் 10ஆவது நாள்: உலக அளவில் எத்தனை கோடி வசூல் ஆகியுள்ளது தெரியுமா?
ஃபைட்டர் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 10ஆவது நாளில் நல்ல வசூலை எட்டியுள்ளது.
'ஃபைட்டர்' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலானது 10ஆவது நாளில் அதிகரித்துள்ளது.
ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான 'ஃபைட்டர்' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலானது 10ஆவது நாளில் அதிகரித்துள்ளது. இரண்டாவது வாரத்தில் நுழைந்த ஃபைட்டர் திரைப்படம் 10ஆவது நாளில் மட்டும் உலகளவில் ரூ.15.19 கோடி வசூலித்ததாக திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் தெரிவித்துள்ளார். இந்தியாவை விட வெளிநாடுகளில், ஃபைட்டர் படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபைட்டர் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்:
ஃபைட்டர் திரைப்படத்தின் உலகளாவிய வசூல் இப்போது ரூ.287.7 கோடியாக உள்ளது. ஃபைட்டர் சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் படிப்படியாக வசூலை ஈட்டியது.
ஃபைட்டர் திரைப்படம் முதல் நாளில் ரூ.36.04 கோடியாகவும், 2ஆவது நாளில் ரூ.64.57 கோடியும், 3ஆவது நாளில் ரூ .56.19 கோடியும், 4ஆவது நாளில் ரூ .52.74 கோடியும் வசூலித்தது. இருப்பினும், அடுத்த நாளான 5 வது நாளில் ஃபைட்டர் கடுமையான மற்றும் கணிக்க முடியாத வீழ்ச்சியைக் கண்டது. அப்போது ரூ.16.33 கோடி மட்டுமே வசூலித்தது.
அதன்பின் ஃபைட்டர் திரைப்படம் 6ஆவது நாளில் ரூ.14.49 கோடியும், 7-வது நாளில் ரூ.11.7 கோடியும், 8-வது நாளில் ரூ.10.24 கோடியும் வசூலித்தது. வெள்ளிக்கிழமை, 9ஆவது நாளில், ஃபைட்டர் ஒற்றை இலக்கங்களைப் பதிவு செய்து ரூ.9.75 கோடியை வசூலித்தது. பத்தாவது நாளில் ₹ 15.19 கோடி வசூல் செய்தது.
ஃபைட்டர் படம் எத்தகையது?
ஃபைட்டர் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் ஹிருத்திக், தீபிகா, அனில் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். கரண் சிங் குரோவர் மற்றும் அக்ஷய் ஓபராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் இந்திய ஆயுதப்படை ராணுவத்தினரின் தியாகம் மற்றும் தேசபக்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எடுக்கப்பட்டது. ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக விமானப்படை தலைமையகத்தால் நியமிக்கப்பட்ட ஏர் டிராகன்கள் என்ற புதிய பிரிவைச் சுற்றி இக்கதை சுழல்கிறது.
ஃபைட்டர் படத்துக்கு நல்ல விமர்சனம் இருந்தும் மெதுவாக நடந்த பிக்கப்:
நல்ல விமர்சனங்கள் மற்றும் மவுட் டாக் ஆகிய இரண்டும் ஃபைட்டர் படத்துக்கு இருந்தபோதிலும் பாக்ஸ் ஆபிஸில் படமானது சராசரி வரவேற்பை மட்டுமே பெற்றது என படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அவர் ஃபைட்டர் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்று தான் ஏன் நினைக்கிறேன் என்று கலாட்டா பிளஸிடம் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஃபைட்டர் திரைப்படம், ஒரு பெரிய பாய்ச்சல். இது யாருக்கும் தெரியாத ஒரு புதிய கதைக்களம். இது பார்வையாளர்களுக்கு எந்த குறிப்பு புள்ளியினையும் இப்படம் சொல்லவில்லை. இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள், ஒரு கமர்ஷியல் இயக்குநர் இருக்கிறார். இது மக்களுடைய படம் என்பதை அவர்கள் உணரவில்லை. நம்மில் 90 சதவீதம் பேர் விமானத்தில் பறக்கவில்லை என்று சொல்வேன். விமான நிலையம் செல்லாதவர்கள் நம் நாட்டில் ஏராளமானவர்கள். எனவே, காற்றில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிய ஆர்வம் காட்டுவார்கள் என நினைத்தோம். அது மெல்ல மெல்லதான் நடக்கிறது’’ என ஃபைட்டர் படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9