Fighter Trailer: பிரம்மிக்க வைக்கும் ரித்திக் ரோஷனின் ஃபைட்டர்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் ஃபைட்டர் பட ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

ஃபைட்டர்
இந்திய ராணுவ கேப்டனாக லக்ஷ்யாவில் தனது முத்திரை பதிக்கும் நடிப்பின் மூலம் பார்வையாளர்களை கிறங்கச் செய்த ஹிருத்திக் ரோஷன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சித்தார்த் ஆனந்தின் ஃபைட்டரில் இந்திய பாதுகாப்பு படை சீருடை அணிந்திருக்கிறார்.
இந்த முறை ஜெட் பைலட்டாக தனது அதிரடி நடிப்பில் அசத்தவிருக்கிறார் ஹிருத்திக் ரோஷன். ஷாம்ஷெர் பத்தானியா என்கின்ற பட்டி வேடத்தில் இந்திய விமானப்படையின் சிறப்பு பணி குழுவின் படைத்தலைவராக ஃபைட்டர் படத்தில் ஹிருத்திக் ரோஷன் அதிரடி காட்டுகிறார்.
இந்தப் பாத்திரத்தில் தேசபக்தி மிகுந்த வீர வசனங்களை ஹிருத்திக் ரோஷன் பேசும்போது அது பார்வையாளர்களை வெகுவாக உணர்ச்சி வசப்படச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
