Fighter Box Office Collection: மைல்கல் வைத்த அட்லீ.. சிம்ம சொப்பனத்தில் ஷாருக்.. திணறும் ஹிருத்திக்! - ஃபைட்டர் வசூல்?
கடந்த ஜனவரி 25ம் தேதி இந்தியாவில் மட்டும் 22.5 கோடி ரூபாயை வசூல் செய்த இந்தப்படம் முதல்வார முடிவில் 146.5 கோடி ரூபாயை வசூல் செய்தது. ஆனால் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படத்திற்கு அந்த முதல் வார வசூல் என்பது குறைவு என்றே சொல்லப்படுகிறது.
பாலிவுட் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரது நடிப்பில், கடந்த மாதம் குடியரசு தினமான ஜனவரி 25ம் தேதி வெளியான திரைப்படம் ‘ஃபைட்டர்’.
இந்தப்படத்தை ‘வார்’, ‘பதான்’ ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கி இருந்தார். இந்தப்படத்தின் தற்போதைய வசூல் விபரங்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஜனவரி 25ம் தேதி இந்தியாவில் மட்டும் 22.5 கோடி ரூபாயை வசூல் செய்த இந்தப்படம் முதல்வார முடிவில் 146.5 கோடி ரூபாயை வசூல் செய்தது. ஆனால் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படத்திற்கு அந்த முதல் வார வசூல் என்பது குறைவு என்றே சொல்லப்படுகிறது.
காரணம், முன்னதாக சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படமாக இருந்த போதிலும், முதல் வாரத்தில் அந்த திரைப்படம் 364.15 கோடி வரை வசூல் செய்தது.
பிரபல ட்ரேடர் மனோபாலா கொடுத்துள்ள விபரங்கள்!
இரண்டாவது வாரத்தில் அந்த திரைப்படம் 94.75 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதனுடன் ஒப்பிடும் போது, இரண்டாவது வாரத்தில் ஃபைட்டர் திரைப்படத்தின் வசூல் 73.98 சதவீதமாக குறைந்து இருக்கிறது.
தோராயமாக பார்த்தால் கூட, ஃபைட்டர் திரைப்படம் நேற்றைய தினம் வெறும் 2.65 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
இரண்டாவது வாரத்தில் இந்தத்திரைப்படம் 40.9 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக பார்க்கும் போது, ஃபைட்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 311 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
பாலிவுட்டில் கடந்த காலங்களில் கமர்சியல் ஹிட் அடித்த அட்லீ - ஷாருக் கூட்டணியின் ஜவான் திரைப்படம் முதல் வாரத்தில் 464.8 கோடி ரூபாய் வசூல் செய்தது. 2 ஆவது வாரத்தில் 161.4 கோடி ரூபாய் வசூல் செய்தது.
அதே போல, கடார் 2 திரைப்படம் முதல் வாரத்தில் 284.63 கோடியும், இரண்டாவது வாரத்தில் 134.47 கோடியும் வசூல் செய்தது. ரன்பீர் கபூரின் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் முதல் வாரத்தில் 337.58 கோடி ரூபாய் வசூல் செய்தது. இரண்டாவது வாரத்தில் இந்த திரைப்படம் 139.26 கோடி ரூபாய் வசூல் செய்தது.
டாபிக்ஸ்