FEFSI: எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் "நோ"..பெண்கள் மீதான அத்துமீறலுக்கு ரகசிய விசாரணை - ஆர்.கே. செல்வமணி உறுதி-fefsi wont support films shooting outside tamilnadu special committee for women prevention says rkselvamani - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Fefsi: எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் "நோ"..பெண்கள் மீதான அத்துமீறலுக்கு ரகசிய விசாரணை - ஆர்.கே. செல்வமணி உறுதி

FEFSI: எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் "நோ"..பெண்கள் மீதான அத்துமீறலுக்கு ரகசிய விசாரணை - ஆர்.கே. செல்வமணி உறுதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 18, 2024 02:50 PM IST

FEFSI Press Meet: தேவையில்லாத காட்சிகளை வேறு மாநிலங்களில் அல்லது நாட்டில் எடுத்தால் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் பெப்சி ஒத்துழைப்பு தராது. சினிமாத்துறையில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலுக்கு ரகசிய விசாரணை நடத்தப்படும் எனவும்,அவர் பெரிய ஆளாக சமமேளனம் துணை நிற்கும் என்றார் ஆர்.கே. செல்வமணி

FEFSI: எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் "நோ"..பெண்கள் மீதான அத்துமீறலுக்கு ரகசிய விசாரணை - ஆர்.கே. செல்வமணி உறுதி
FEFSI: எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் "நோ"..பெண்கள் மீதான அத்துமீறலுக்கு ரகசிய விசாரணை - ஆர்.கே. செல்வமணி உறுதி

புதிய விதிமுறை

வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அனைத்து விதிமுறைகளையும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் நடிகர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுத்த பின் நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகளோடு படப்பிடிப்பு தொடங்கப்பட வேண்டும். இது நடக்காத பட்சத்தில் படப்பிடிப்பு நிறுத்தம் தொடரும் எனவும், சுமூக முடிவு எடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் புதிய படப்பிடிப்பு பணிகளை தொடங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே. செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி சம்மேளனத்துக்கு அனுப்பிய மறுசீரமைப்புக்கான விதிமுறைகள் அனைத்துக்கும் பதிலை கடந்த வாரமே அனுப்பி உள்ளோம். இந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கி, விரைவில் முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ஏற்கனவே புதிய திரைப்படங்கள் தொடங்குவது நிறுத்தப்பட்டமையால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பேச்சுவார்த்தை நடத்தி செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிவெடுத்து, அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகளோடு அனைத்து படப்பிடிப்புகளும் தொடங்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்.

பெண்கள் பாதுகாப்புக்கு தனிக்குழு

திரைப்படத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து சம்மேளனத்தின் சார்பில் இயக்குநர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், டப்பிங் யூனியன், மகளிர் யூனியன் உள்ளிட்ட 7 சங்கங்களில் இருந்து இரண்டு பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், சமூக சேவகர்கள் மற்றும் பத்திரிகையாளர் அமைப்பில் இருந்து மூவர் அடங்கிய குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம். புகார் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலியல் புகாரில் எச்சரிக்கை என்பது சரிவராது. குற்றத்தின் தன்மையை பொறுத்து மாறுபடும். குற்றத்தின் தன்மை தீவிரமாக இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் திரையுலகில் இதுபோன்ற புகார்கள் ரொம்ப குறைவு.

பெண் தொழிலாளர்கள் மீது அத்துமீறுபவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் உங்களுக்கு சம்மேளனம் துணை நிற்கும். விசாரணை ரகசியமாக நடத்தப்படும். தைரியமாக புகார் அளிக்கலாம். தமிழ் திரையுலகில் உள்ள உப்புமா கம்பெனிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். திரைப்படத்துறை பெயரைச் சொல்லி ஏமாற்றும் கும்பல் உள்ளது.

தனுஷ் பட விவகாரம்

தனுஷ் படத்தின்‌ படப்பிடிப்பு ஜூலை மாதமே தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் முறைப்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தெரிவிக்கவில்லை. பதிவும் செய்யவில்லை. தனுஷின் ஒண்டர்பார் நிறுவனத்தின் அறியாமை அல்லது மெத்தனப்போக்கு காரணமாக சம்மேளனம் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

பின்னர் ஜூலையிலேயே படப்பிடிப்பு நடந்ததற்கான ஆதாரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தயாரிப்பாளரின் வேண்டுகோள் மற்றும் பெப்சியின் பரிந்துரை கடிதம் ஆகியவற்றை ஏற்று தயாரிப்பாளர்கள் சங்கம் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியது.

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் ஒத்துழைப்பு கிடையாது

நவம்பர் 1ஆம் தேதி முதல் தமிழ் சினிமாவின் காட்சி அமைப்புகளுக்கு தேவையில்லாத காட்சிகளை வேறு மாநிலங்களிலோ அல்லது நாட்டிலோ போய் எடுத்தால் அது எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் அதற்கு பெப்சி ஒத்துழைப்பு தராது.

70 சதவீதம் படப்பிடிப்பு தமிழகத்தில் நடத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக இருந்தது. இப்போது இதுதான் எங்களின் முடிவு."

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.