Top 10 Cinema: எதிர்பார்த்ததை கொடுக்கும் அஜித் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கை கோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார் வரை..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema: எதிர்பார்த்ததை கொடுக்கும் அஜித் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கை கோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார் வரை..

Top 10 Cinema: எதிர்பார்த்ததை கொடுக்கும் அஜித் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கை கோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார் வரை..

Malavica Natarajan HT Tamil
Published Feb 09, 2025 10:06 PM IST

Top 10 Cinema: அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை 10 மடங்கு பூர்த்தி செய்வதாக வந்த தகவல் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கைகோர்க்கும் நயன்தாரா வரை இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இங்கு பார்க்கலாம்.

Top 10 Cinema: எதிர்பார்த்ததை கொடுக்கும் அஜித் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கை கோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார் வரை..
Top 10 Cinema: எதிர்பார்த்ததை கொடுக்கும் அஜித் முதல் ஸ்டார் நடிகர்களுடன் கை கோர்க்கும் லேடி சூப்பர் ஸ்டார் வரை..

எனர்ஜி கொடுத்த குட் பேட் அக்லி அப்டேட்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தத் திரைப்படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில், குட் பேட் அக்லி படத்தில் 10 மடங்கு அதிகமான மாஸ் காட்சிகள் இருக்கும் என அப்படத்தின் ஸ்டன்ட் டைரக்டர் சுப்ரீம் சுந்தர் கூறியுள்ளார். விடாமுயற்சி படத்தில் மாஸ் சீன்கள் எதுவும் இல்லாத நிலையில், சுந்தர் மாஸ்டரின் பேச்சு ரசிகர்களுக்கு எனர்ஜி அளித்துள்ளது.

கூலி ரிலீஸ்

நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படமாக உருவாகி வரும் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் , நாகார்ஜூனா, உபேந்திரா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் முடிந்து விட்டதாகவும் படம் ஆகஸ்ட் மாத்திலோ அல்லது தீபாவளி அன்றோ வெளியாகும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஜன நாயகனில் இணையும் ஸ்ருதி ஹாசன்?

நடிகர் விஜய்யின் 69வது படமான ஜன நாயகனில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், டிஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது விஜய்யின் கடைசி படமாக இருப்பதால் ஹெச். வினோத் இந்தப் படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளத்தையே படத்தில் வைத்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் சூடுபிடிக்கும் இளையராஜா பயோபிக்

இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திந் படப்பிடிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இளையராஜா பயோபிக் கைவிடப்படவில்லை என்றும் படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள ஸ்டார்களுடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார்

நடிகை நயன்தாரா மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. மகேஷ் நாராயண் இயக்கும் இந்தப் படத்தில் மம்முட்டி, மோகன்லால், பகத் ஃபாசில் போன்ற மலையாள உச்ச நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நயன்தாரா எந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்

ஸ்பெயினில்நடைபெறும் பார்சிலோனா கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள நடிகர் அஜித், தன் குழுவினருடன் அங்கு கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் விபத்தில் சிக்கியதாகவும், அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், தாங்கள் விரைவாக மீட்கப்பட்டதால், தற்போது நலமுடன் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் நடிகர் அஜித் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ராஜமௌலி படத்தில் பாலிவுட் நடிகர்?

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான ராஜமௌலி தற்போது நடிகர் மகேஷ் பாபுவை வைத்து எஸ்எஸ்எம்பி 29 படத்தை இயக்கும் வேலையில் இறங்கி உள்ளார். இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது, மகேஷ் பாபுவின் அப்பா கேரக்டரில் பாலிவுட் பிரபலம் நானா படேகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேங்க்ஸ்டராகும் கார்த்தி!

மெய்யழகன் படத்திற்கு பிறகு வா வாத்தியார், சர்தார் 2 படங்களில் நடித்து வரும் கார்த்திக் தற்போது டாணாக்காரன் இயக்குநர் தமிழுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். கார்த்தியின் 29வது படமான இந்தப் படத்திற்கு தற்போது கார்த்தி 29 என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் கடல் பிண்ணனியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநராக அறிமுகமாகும் சதீஷ்

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகவும் நடிகராகவும் அறியப்பட்ட சதீஷ், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்லார். இவர் நடிகர் கவினை வைத்து தனது படத்தை இயக்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கான டைட்டிலை நாளை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடிக்க உள்ளார்.

NEEK டிரெயிலர்

தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரெயிலர் நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த பாடல்கள் எல்லாம் மக்களிடம் ஹிட் அடித்த நிலையில் நாளை படத்தின் டிரெயிலருக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.