Top 10 Cinema: ரசிகர்களால் ஆதங்கப்பட்ட சைதன்யா முதல்.. அப்டேட் மேல் அப்டேட் தந்த சூர்யா வரை.. இன்றைய டாப் 10 செய்திகள்..
Top 10 Cinema: நடிகர் நாக சைதன்யா ரசிகர்களின் செயலால் தான் குற்றவாளி போல் உணர்வதாக ஆதங்கப்பட்டது முதல் அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து கொண்டாடிய சூர்யா வரை இன்றைய டாப் 10 செய்திகளை இங்கு பார்க்காலம்.

Top 10 Cinema: நடிகர் நாக சைதன்யா ரசிகர்களின் செயலால் தான் குற்றவாளி போல் உணர்வதாக ஆதங்கப்பட்டது முதல் அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து கொண்டாடிய சூர்யா வரை இன்றைய டாப் 10 செய்திகளை இங்கு பார்க்காலம்.
என்னை குற்றவாளி போல பார்க்கிறார்கள்
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின் நடிகர் நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், விவாகரத்து முடிவை சமந்தாவுடன் பேசி பரஸ்பர புரிதலுடன் எடுத்திருந்தாலும், ஊடகங்களும், ரசிகர்களும் என்னை மட்டும் குற்றவாளி போல் பார்க்கின்றனர் என நடிகர் நாக சைதன்யா ஆதங்கமாக பேசியுள்ளார். மேலும், இருவரும் பிரிந்து விட்டோம். வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றுவிட்டோம். அதனால் எங்கள் தனிமனித உரிமையை மதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
டிரெயிலர் ரிலீஸை அறிவித்த NEEK
நடிகர் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் டிரெயிலர் வரும் 10ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்தர் என பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
காமிக் கதையாக வரும் மெட்ரோ
நடிகர் சூர்யாவின் 44வது படமாக உருவாகியுள்ளது மெட்ரோ. பீரியாடிக் ஆக்ஷன் மற்றும் காதல் படமாக அமைந்த இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை காமிக் வடிவில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
சர்வதேச விருது வென்ற பேட்கேர்ள்
இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்த படம் பேட் கேர்ள். இந்தப் படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கி இருந்தார். இப்படத்தின் டிரெயிலர் வெளியான போதே பல சர்ச்சைகளை சந்தித்தது. இந்நிலையில், பேட் கேர்ள் படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விவாவில் தேர்வு செய்யப்பட்டு NETPAC விருதை வென்றுள்ளது.
காஞ்சனா 4ல் பூஜா ஹெக்டே
தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கான மவுசு குறையாமலே இருக்கிறது. இதற்கு காஞ்சனா மற்றும் அரண்மனை படங்களின் தொடர் வெற்றியே சான்றாக எடுத்துக் கொள்ளலாம், இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 4 படத்தை எடுக்க தயாராகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்ஷனும் கோல்டன் மைன் நிறுவனமும் தயாரிக்கிறது என்றும் பூஜா ஹெக்டே மற்றும் பாலிவுட் நடிகை நோரா பதேகி ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
குட் பேட் அக்லி படத்தின் டீசர்
நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் வெளியாகி 2 நாட்களே ஆன நிலையில், அவரது ரசிகர்கள் அதற்குள்ளாக அடுத்து ரிலீஸிற்கு தயாராக உள்ள குட் பேட் அக்லி படம் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் அஜித்நகுமாருடன் த்ரிஷா, பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் காதலர் தினத்தன்று வெளியாக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
தீயாய் இறங்கிய சுந்தர்.சி
இயக்குநர் சுந்தர்.சியின் மதகஜராஜா படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விஷாலை வைத்து அடுத்த படம் இயக்கும் முயர்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதன்படி, இந்தப் படத்திற்கும் சந்தானத்தை காமெடியனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அது ஒருவேளை நடக்கவில்லை என்றால் அந்தப் படத்தில் வடிவேலுவை காமெடியனாக நடிக்க வைக்கலாம் என பேசி வருவதாகத் தெரிகிறது.
மோடியை சந்தித்த நாகர்ஜூனா குடும்பம்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜூனா தன் மனைவி, மகன், மருமகளோடு பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அப்போது, பழம்பெரும் நடிகர் நாகேஸ்வர ராவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு எழுத்தாளர் யர்லகட்டா லட்சுமி பிரசாத் எழுதிய நாகேஸ்வர ராவ் வரலாற்று புத்தகத்தை பிரதமருக்கு பரிசளித்தார். பின், தெலுங்கு சினிமாவில் நாகேஸ்வர ராவின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.
குடும்பஸ்தன் ஓடிடி
நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வந்தது. நடுத்தர வர்க்க ஆண்களின் துயரை நடித்துக் காட்டாமல் வாழ்ந்து காட்டி இருக்கிறார் மணிகண்டன் ென பலரும் பாராட்டி வந்த மக்கள் இப்படத்தின் ஓடிடி ரிலீஸிற்காக காத்திருந்தனர். அவர்களுக்காகவே ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 28ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் குடும்பஸ்தன் படம் வெளியாகவுள்ளது.
எம்பூரான் மாஸ் அப்டேட்
நடிகர் பிருத்திராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி தற்போது லூசிபர் படத்தின் 2ம் பாகமாக எம்புரான் படத்தை இயக்க உள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை முதல் எம்புரான் படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்