Karthigai Deepam: சந்தோஷத்தில் துள்ளும் மாயாவுக்கு கார்த்தி வைக்கப் போகும் செக் மேட்! கார்த்திகை தீபம் சீரியல்
Karthigai Deepam Serial: கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்தியை ஊரை விட்டே துரத்திவிட்ட சந்தோஷத்தில் இருக்கும் மாயாவிற்கு செக் மேட் வைக்கும் விதமாக திட்டம் ஒன்றை தீட்டி உள்ளார் கார்த்திக்.

Karthigai Deepam Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜனுக்கு கார்த்திக் தன்னுடைய தங்கையின் மகன் என்று தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சந்தோஷத்தில் மாயா
அதாவது, மாயா வீட்டில் மாயாவும் மகேஷும் திட்டமிட்டபடியே அந்த ட்ரைவரை ஊரை விட்டு துரதியாச்சு என்று நினைத்து சந்தோசப்படுகின்றனர். மறுபக்கம் கார்த்தியை சந்தித்த ராஜராஜன் என் தங்கச்சி பையனா நீ என்று மிகுந்த சந்தோசப்படுகிறார். நானே உன்னை ஊரை விட்டு போக சொல்ற மாதிரி பண்ணிட்டேனே என்று வருத்தப்படுகிறார். அதற்காக ராஜ ராஜன் மன்னிப்பும் கேட்கிறார்.
அம்மாவை சந்தித்த ராஜ ராஜன்
அடுத்ததாக கார்த்திக் ராஜராஜனையும் பாட்டி பரமேஸ்வரியையும் சந்திக்க வைக்கிறான். 25 வருடங்களுக்கு பிறகு அம்மாவை சந்தித்த ராஜராஜன் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கண் கலங்குகிறார். பரமேஸ்வரி பாட்டி பெத்த புள்ளையை பார்த்துட்டேன் என்று சந்தோசப்படுகிறாள்.
கார்த்திக்கின் திட்டம்
அதனை தொடர்ந்து ராஜராஜன் கார்த்தியிடம் நான் தானே நீ ஊரை விட்டு போக காரணமாகிட்டேன். பஞ்சாயத்தில் வைத்து நான் பொய் சொல்லிட்டேன் என்று சொல்லி உன்னை வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்கிறார்.
ஆனால் கார்த்திக் வேண்டாம் மாமா என்று ராஜராஜனை தடுத்து நிறுத்துகிறான், மேலும் ஊருக்குள் மீண்டும் வர வேற வழி இருக்கு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கார்த்திக்கிற்கு வந்த நெருக்கடி
முன்னதாக கார்த்திக்கை பழிவாங்க நினைத்த மாயா, பணத்தேவை இருக்கும் ஒரு காதல் ஜோடியை கூப்பிட்டு அவர்களுக்கு பணம் கொடுத்து, கார்த்திக் ரூமுக்கு சென்று, அவன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி விட்டதாக வெளியே ஓடி வர வேண்டும் என்று சொல்கிறாள். பிறகு அந்தப் பெண் கார்த்திக் ரூமுக்குள் செல்ல, இதை ராஜ ராஜன் பார்த்து விடுகிறார். கொஞ்ச நேரத்தில் அந்த பெண் கார்த்திக் தன்னை கெடுத்து விட்டதாக சொல்லி சத்தம் போட்டபடி வெளியில் வருகிறாள்.
பஞ்சாயத்தில் சம்பவம்
இதை பார்த்த மக்கள், கார்த்திக்கை குற்றவாளி என நினைத்து பஞ்சாயத்தை கூட்டுகின்றனர். ஆனால், என் வீட்டு டிரைவர் கார்த்திக் தப்பானவர் இல்லை என சாமுண்டீஸ்வரி கூறிய போதும், அதனை சிவணாண்டி சாமுண்டீஸ்வரிக்கு எதிராக திருப்பி விட்டான்.
இதற்கிடையில், பஞ்சாயத்தில் கார்த்திக் அறைக்கு அந்தப் பெண் போனதை பார்த்த சாட்சி இருக்கிறதா எனக் கேட்ட நிலையில், ராஜ ராஜன் தான் அதைப் பார்த்ததாக கூறியதால் கார்த்திக்கிற்கு எதிரான ஆதாரம் வலுவானது. இதனால், கார்த்திக்கை ஊரை விட்டு வெளியே அனுப்புமாறு தீர்ப்பு வந்தது.
உண்மையை சொன்ன மயில் வாகனம்
பிறகு ராஜராஜன் தனியாக இருக்கும் போது அங்கு வரும் மயில்வாகனம் அந்த ட்ரைவர் தம்பி யார் தெரியுமா? உங்க தங்கச்சி அபிராமியோட பையன். ராஜா சேதுபதி ஊர்ல கோவில் கும்பாபிஷேகத்தை உங்க கையால் நடத்தி வைக்கணும்.. இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்கணும் என்பதற்காக தான் இங்க வந்திருக்காரு என்ற விஷயத்தை உடைக்கிறான்.

டாபிக்ஸ்